________________
118 துணைப் பாடம் றாள். அவ்வழகர் திரிகூடநாதர் என்பதை அறிந்து, அவர்பால் மாறாத காதல் கொள்ளுகிறாள்; திரிகூட நாதரை அடைய விரும்பிக் கவலை கொள்ளுகிறாள்; திரிகூடநாதரின் பெருமைகளையும் சிறப்புக்களையும் தன் தோழியிடம் எடுத்துச் சொல்கிறாள்; அத் தோழி யைத் தன் காதலர்பால் தூது சென்று வருமாறு வேண்டுகிறாள். சிங்கியின் தோற்றம் இச்சமயத்தில் கையில் மாத்திரைக்கோலும், இடுப்பில் மணிக்கூடையும் நெற்றியில் திருநீரும் அதன் இடையே திலகமும் தாங்கி அழகுத்தெய்வம் வருவது போலச் சிங்கி என்னும் குறவஞ்சி வருகின் றாள். அவளது நா திரிகூடநாதரின் புகழ் பாடிய வண்ணம் இருக்கிறது. அக்குறவஞ்சி கொங்கணம், ஆரியம், குச்சலம், கன்னடம், தெலுங்கு, கலிங்கம் முதலிய நாடுகளில் குறி சொல்லி வெற்றிக்கொடி நாட்டியவள்; நா வன்மை மிக்கவள்; கற்றுவல்ல பெரியோர் பலர் கூடியிருக்கும் அவையில் நின்று பேசும் துணிவும், அவையோரைத் தன் பேச்சுத் திறனால் வியப்பில் ஆழ்த்தும் வன்மையும் உடையவள்; கை பார்த்துக் குறி கூறும் திறமை படைத்தவள். சிங்கி மலைவளம் கூறல் குறி கூறும் குறவஞ்சி வருதலைக் கண்ட வசந்த வல்லி மனமகிழ்ந்து அவளை அழைக்கின்றாள்; குறத்தி வாழும் மலையின் வளத்தைக் கூறுமாறு வேண்டுகின் றாள். உடனே திரிகூட மலையின் வளமும், மலைவாழ் மக்களின் வாழ்க்கை வளமும் குறவஞ்சியின் வாயில் கவிதையாக எழுகின்றன. மலையிலிருந்து அருவி