உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றால அருவி 119 துள்ளி விழுதல் போலக் குறவஞ்சியின் நாவிலிருந்து சொற்கோவை துள்ளி எழுகின்றது. திரிகூடமலையில் வாழும் சிறிய விலங்கினங்களின் வாழ்க்கையில் காதல் தவழ்ந்து விளையாடுவதைக் குறத்தி முதலில் எடுத் துரைக்கின்றாள். ஆண் குரங்குகள் பழங்களைப் பறித்துவந்து பெண் குரங்குகளுக்குக் கொடுத்து அவற்றோடு கொஞ்சும். பெண் குரங்கு அவற்றைத் தின்னும்போது சிந்தும் பழங்களைப் பெறுவதற்காக ஆண் குரங்கு ஏங்கி நிற்கும்.* கேவலம் விலங்குகள் இவ்வாறு காதலுற்று வாழ்கின்றன எனின், அம் மலையில் வாழும் குறவர் வாழ்க்கை பற்றிக் கூறவும் வேண்டுமோ? தேனருவி திரை வீசிப் பாய்வதையும், தேனெடுத் தும், கிழங்கு கல்லியும், குறவர் உழைப்பு மிகுதியும் இன்றி மகிழ்வோடு வாழ்வதையும், சந்தனமும் குங்குமமும் அகிலும் மலையெங்கும் மணம் பரப்புவதை யும், வரையாடுகள் கவலையறியாது துள்ளி விளையாடு தலையும் குறத்தி இனிமையுற எடுத்து இயம்புகின்றாள். நாட்டு வளம் மலைவளத்தைக் கேட்ட வசந்தவல்லி அவளது நாட்டு வளத்தையும் நகர் வளத்தையும் உரைக்கும்படி வேண்டுகிறாள். எருமைகள் நீர் பருகும் துறையில் நின்று, தம் கன்றுகளை நினைந்துபால்சொரியும். அந்தப் பாலைப் பருகிய வாளை மீன்கள் கரையில் நிற்கும் பலாமரத்தில் பாய், பலாப்பழம் ஒன்று உதிர்ந்து அருகிலுள்ள வாழைமரத்தின் மீது விழ, "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/123&oldid=1693082" இலிருந்து மீள்விக்கப்பட்டது