12 குடியேற்றம் துணைப் பாடம் 17 ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் பிரஞ் சியர், ஸ்பானியர், ஆங்கிலேயர்,ஸ்வீடிஷ்காரர், டச்சுக் காரர் என்போர் ஏற்படுத்திய குடியேற்றங்களில் சில, பிற்காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளாகத். தோற்றம் எடுத்தன. இந்நிலப்பகுதிக்கு வடபால் உள்ள பகுதி கானடா எனப்படும். அங்கு ஆங்கிலேயர் மிகுதியாகக் குடியேறினர். அமெரிக்க ஐக்கிய நாடு களுக்குத் தெற்கே மெக்ஸிகோ நாடு ஏற்பட்டது. தென் அமெரிக்காவில் ஸ்பெயின் நாட்டு மக்கள் மிகுதி யாகக் குடியேறிப் பல நாடுகளை அமைத்துக் கொண் டனர். இவ்விரண்டு கண்டங்களையும் பனாமா கால் வாய் பிரிக்கின்றது. ஏறத்தாழ நானூறு ஆண்டு களுக்கு முன்பு பெருங்காடுகளையும் கொடிய விலங்கு. களையும் பண்டைக் குடிகளையும் கொண்டிருந்த அமெ ரிக்கா, ஐரோப்பாக் கண்டத்து மக்களின் இடைவிடா உழைப்பால் பல்வகை வளங்களும் பெற்றுப் பொன் கொழிக்கும் புத்துலகமாகக் காட்சியளிக்கின்றது; அமெரிக்க நாடுகள் அனைத்தினும் அமெரிக்க ஐக்கிய நாடுகளே எல்லா வளங்களும் நிரம்பப் பெற்றவை. நாகரிகத்திலும் முன்னணியில் நிற்பவை. உலகிற் சிறந்த குபேர நாடாக ஐக்கிய நாடுகள் விளங்குகின் றன. அங்கு இயற்கைச் செல்வங்களான மலைகளும் யாறுகளும், இரும்பு, பொன், வெள்ளி, நிலக்கரி, மண்ணெண்ணெய் முதலியனவும் மிகுதியாகக் கிடைக் கின் றன. இந்த இயற்கைச் செல்வங்களும், மக்க. ளது இடையறா உழைப்பும் சேர்ந்து அந்நாட்டைம் பொன்கொழிக்கும் திருநாடாகச் செய்துவிட்டன.
பக்கம்:அருவிகள்.pdf/12
Appearance