உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II நயாகரா அருவி 1. வட அமெரிக்கா 11 யுதிய உலகம் றது. இன்று வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று சொல்லப்படும் இரண்டு பெரிய கண்டங்கள் புதியனவாகக் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆதலால் அவை உள்ள பகுதி புதிய உலகமெனப் பெயர் பெற் கி.பி.1492ஆம் ஆண்டு கொலம்பஸ் என்னும் ஜினோவா வீரர் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து வட அமெரிக்காவுக்குக் கிழக்கிலுள்ள சில தீவுகளைக் கண்டுபிடித்தார்; அவற்றை இந்தியாவின் ஒரு பகுதி 'யெனக் கருதினார்; அங்கு இருந்த பண்டை மக்களை இந்தியர் என்று அழைத்தார். அமெரிக்கோ வெஸ் பூச்சி என்னும் இத்தாலிய நாட்டுக் கப்பலோட்டி கொலம்பஸைப்போலவே அட்லாண்டிக் பெருங்கடலை நான்கு முறை (1497க்கும் 1504க்கும் இடையே) கடந்து, புதிய கண்டத்தைக் கண்டறிந்தார். கொலம் பஸ் 1492இல் அமெரிக்காவை அடைந்தாராயினும், அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு அக்கண்டத் தைக் கண்டுபிடித்த இவ்வித்தாலியரே அஃது ஒரு புதிய கண்டமென்றும், கொலம்பஸ் கருதியபடி அஃது இந்தியா அன்று என்றும் உலகறியச் செய்த வர். ஆதலால், இவர் பெயரே அக்கண்டத்திற்கு இடப்பட்டு, அமெரிக்கா என்று அழைக்கப்பட்டு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/11&oldid=1692971" இலிருந்து மீள்விக்கப்பட்டது