உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 துணைப் பாடம் தாழ்ந்த நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி வருகின்றான். முதலில் மலைக் குகைகளில் வாழ்ந்த அவன், தனது இயக்கத்தினால் குடிசை வீட்டைக் கட்டினான்; பிறகு ஓட்டு வீட்டை அமைத்தான்; பின்பு மாடிவீட்டைக் கட்டினான். இவ்வாறே அவன் தனது இயக்கத்தால் ஒவ்வொரு துறையிலும் இன்றுவரை முன்னேறி வருகின்றான். புதுமை காணும் வேட்கை அவனுக்கு இயக்கத்தைக் கொடுத்துப் பல புதுமை களைக் காணத் தூண்டியது. அவன் அத் தூண்டுத லால் உந்தப்பட்டு, உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல முற்பட்டான்; பல்லாயிரக் கல் கணக்கில் பரந்து கிடக்கும் கடலை அரும்பாடுபட்டுத் தாண்டினான்; வானத்தில் விண்மீன்கள் தோன்றுவது போலக் கட லில் காட்சியளித்த நூற்றுக் கணக்கான தீவுகளைக் கண்டறிந்தான்; ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரே லியா போன்ற பெருநிலப் பகுதிகளைக் கண்டுபிடித் தான்; உலகம் தட்டையானது என்று மக்கள் நம்பி வந்த காலத்தில், தன் உயிரையும் பொருட்படுத்தாது, உலகத்தின் இரு கோடிகளையும் கண்டறிந்தான். இவ்வாறு மனிதன் செய்துள்ள மாண்புறு செயல்கள் பலவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/10&oldid=1692970" இலிருந்து மீள்விக்கப்பட்டது