உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 9& காணப்படுவன *'உள்ளது சிறத்தல்' என்ற முறைப் படி தோன்றின," என்று கூறினர்; ஆராய்ச்சியறிவு மிகுதிப்பட்ட காரணத்தால் இப்பொழுது, +'படைப்” பாற்றலால் உள்ளது சிறத்தல்' என்று கூறுகின் றனர். பேராற்றலது இயக்கத்தின் தன்மையைக் கண்டு விஞ்ஞானிகள் வியக்கின்றனர். கண்ணுக்குப் புலனாகும் இப்பரந்த உலகம் மிக முற்பட்ட காலத்தி லிருந்தே ஒரு குறிநோக்கி எய்யப்பட்ட அம்புபோலக் குறிப்பிட்ட ஒன்றை நோக்கி இயங்குவதாக விஞ். ஞானிகள் விளம்புகின்றனர். வியத்தகு படைப்புக்கள் கத்தை 20 கட்புலனுக்குத் தோன்றும் பொருள்களின் இயக் நாம் அறிவோம் அல்லவா ? ஆற்றின் இயக்கத்தை அறியாதார் யார் ? அத்தகைய இயக்கங் களுள், உயர்ந்த மலையிலிருந்து அல்லது பாறையில் லிருந்து பேரிரைச்சலுடன் கீழ்நோக்கி விழும் அருவி யின் இயக்கம் வியக்கத் தக்க ஒன்றாகும். இந்நூலில் இத்தகைய வியத்தகு அருவிகளான நயாகரா அருவி, விக்டோரியா அருவி, சிவசமுத்திர அருவி, குற்றால அருவி என்னும் நான்கையும் பற்றிய விவரங்களைக் காண்போம். இவை முன் சொல்லப்பட்ட இயக்கத் தால் உண்டாகியுள்ள வியத்தகு படைப்புக்களாகும். இயக்கமும் மனிதனும் இறைவனது விருப்பத்திலிருந்து தோன்றிய இயக்கத்தால் உண்டான மனிதன் உயிர்ச் சக்தி யாகிய இயக்கத்தை உறுதுணையாகக் கொண்டு, மிகத்

  • Evolution. † Creative Evolution.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/9&oldid=1692969" இலிருந்து மீள்விக்கப்பட்டது