உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறத்தி குறி கூறல் குற்றால அருவி 121 குறவஞ்சி கஞ்சியும் கூழும் வெற்றிலை பாக்கும் புகையிலையும் தருமாறு கேட்கிறாள்; அப்பொழுது நன்னிமித்தங்கள் தோன்றுவதை வசந்தவல்லிக்குக் காட்டுகிறாள்; பின்பு தரையை நன்கு மெழுகிக் கோல மிட்டுப் பிள்ளையாரை எழுந்தருளுவித்து முப்பழமும் தேங்காயும் வைத்து அப்பம், சோறு முதலியன படைத்து நாழி நெல் அளந்து வைத்து, வழிபாட் டுக்கு உரியவற்றைச் செய்யுமாறு வேண்டுகிறாள்; பின்னர்த் தெய்வங்களை வழிபட்டு வசந்தவல்லியின் கையைப் பார்த்துக் குறி சொல்லத் தொடங்குகிறாள். "நினது கை பிறவா யாக்கைப் பெரியோனுடை கையைப் பற்றும் தன்மையுடையது; நின் கையை பிடிப்பவர் எட்டுத் திக்கும் உடையவர். நீபந்து விளை யாடுகையில் மணியணி பூண்ட மன்னர் ஒருவர் உலா வந்தனர். அவரது சேனை கண்ட அச்சமே இ பொழுது நின்னிடம் தோன்றுகிறது," என்று சிங்கி செப்புகிறாள். இதைக் கேட்டவுடன் வசந்தவல்லி சீற்றம் கொள்கிறாள்; "தெருவில் வரும் சேனையைக் கண்டு அஞ்சியிருந்தால் இந்த மயக்கமும் கிறுகிறுப் பும் என்னிடம் தோன்றுமோ?" என்று கேட்கிறாள். குறத்தி புன்முறுவலோடு, 'அம்மே! வாகனத்தில் வந்த கட்டழகர் மீது நீ காதல் கொண்டாய். கிறுகிறுப்பெல்லாம் காதலின் விளைவே. நான் அதைக் கூற இதுகாறும் அஞ்சியிருந்தேன்," என்று நயம்பட மொழிந்தாள். உனது வச சந்தவல்லி பொய்க்கோபம் கொண்டவளாய்க் குறத்தியை நோக்கி, “நான் கன்னிப்பெண்; அங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/125&oldid=1693084" இலிருந்து மீள்விக்கப்பட்டது