________________
122 துணைப் பாடம் ஙனமிருந்தும் ங்ஙனம் கூறினை; நீ கூறியது உண்மையாயின், அத்தலைவரது ஊரும் பெயரும் மாலையும் சொல்," என்றாள். குறத்தி இவற்றை உடனே உரையாமல், சுற்றி வளைத்து இறுதியில் கூறுகின்றாள்; அவள் காதலர் திருப்பெயர் திரிகூட நாதர் என்பது என்று மொழிகிறாள். இப்பெயரைக் கேட்ட அளவில் வசந்தவல்லி நாணித் தலைகவிழ் கிறாள்; திரிகூடநாதர் தன்னை மணக்க வருவாரென் றும்,தமது கொன்றை மலர் மாலையை அனுப்புவார் என்றும் குறவஞ்சி கூறியவுடன் தன்னை மறக்கின்றாள்; உலகத்தையே மறக்கின்றாள். இங்ஙனம் உள்ளம் பூரித்த வஞ்சிக் கொடி போன்ற வசந்தவல்லி குற வஞ்சிக்கு சிறந்த முறையில் பரிசளிக்கின்றாள். சிங்கன் வேட்டை குறவ யாகிய சிங்கி இவ்வாறு குறி சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது, அவள் கணவனான சிங் கன் களைத் தேடிப் புறப்படுகிறான். அவன் வேட் டையாடும் தொழிலினன்; ஆதலால் வில்லும் அம்பும் கண்ணியும் பிற படைகளும் தாங்கித் தன் தோழன் நூவனையும் அழைத்துக்கொண்டு வருகிறான். வழியில் பறவைகளைப் பிடிக்க, மலைச்சாரல்களிலும் காடுகளி லும், வயல் வெளிகளிலும் வாவிக்கரைகளிலும் அவ் விருவரும் கண்ணிவைத்துக் காத்திருக்கின்றனர். நூவன் மரத்தின்மேல் ஏறிப் பறவைபோலக் கூவு கிறான். அவ்வளவில் பறவைகள் வந்து கண்ணியில் அகப்படுகின்றன. ஆனால், சிங்கனின் உள்ளம் காணா மற்போன சிங்கியின்மீதே இருந்தமையால் கண்ணி .