உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நயாகரா அருவி 23 எண்ணூற்று இருபதடி நீளமும் எண்பது அடி அகல மும் உடையவை. ஒவ்வொரு மதகும் நாற்பத்தாறு அடி உயரமுள்ள தூக்குப் பலகையை உடையது. நயாகரா அருவி நயாகரா ஆறு ஈரி ஏரியிலிருந்து இருபது கல் தொலைவுக்கு மேல் வரும் பொழுது, இடையில் செங் குத்தான பாறை, ஆற்றின் போக்கை இரண்டாகப் பிரிக்கின்றது. இங்ஙனம் பாறையால் பிரிக்கப்பட்டு வலப்பக்கம் செல்லும் ஆற்றின் பகுதியில் முன் சொன்னவாறு முழு ஆற்று நீரில் ஆறு சத வீதமே பாய்கின்றது; எஞ்சிய பகுதி முழுவதும் ஆற்றின் இடப்பகுதியில் பாய்கின்றது. வலப்பக்கம் செல்லும் ஆற்றுப் பகுதி, மேலும் அம்மேட்டுப் பகுதியைச் சுற்றிச் செல்ல வழியின்றிக் குறிப்பிட்ட ஓரிடத்தி லிருந்து நூற்று அறுபத்தைந்து அடிப் பள்ளத்தில் பேரிரைச்சலுடன் வீழ்கின்றது. அது விழும் இடத் தில் அதன் அகலம் ஆயிரம் அடி. இடப்புறம் செல் லும் ஆற்று நீரும் இவ்வாறே பாறையைச் சுற்றிச் செல்ல வழியின்றி ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நூற்றறுபது அடி ஆழத்தில் விழுகின்றது. அது விழும் இடத்திலுள்ள பாறை குதிரைக் குளம்பின் வடிவத்தில் அமைந்துள்ளது. அப்பாறையிலிருந்து கீழ்நோக்கி விழுகின்ற நீரின் வளைவுப்பரப்பின் நீளம் இரண்டாயிரம் அடிக்கு மேற்பட்டதாகும். முன்னது அமெரிக்க ஐக்கிய மாகாண எல்லைக்குள் விழுவது; பின்னது கனடா நாட்டு எல்லைக்குள் விழுவது. முன் னது அமெரிக்க அருவி என்றும், பின்னது குதிரை லாட அருவி என்றும் பெயர் பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/24&oldid=1692984" இலிருந்து மீள்விக்கப்பட்டது