உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 துணைப் பாடம் குறைவாக அமெரிக்க அருவி நீர் அளவில் இருப்பினும், அதனைத் தக்க முறையில் விழும்படி செய்திருக்கும் ஏற்பாடுகளால் அது மிக்க பயன் உடையதாக விளங்குகின்றது. கனடா நாட்டுப் பகுதியிலிருந்து பார்ப்பவருக்கு அமெரிக்க அருவி உச்சியிலிருந்து ஆயிரம் அடி அகலம் வரை ஒரே நேராகக் கீழ்நோக்கி விழுவது போலத் தோன்றும். ஆயின், உண்மையில் அது விழும் பரப்பு நடுப்பகுதி யில் சிறிது பின்னோக்கியுள்ளது. குதிரை லாட அருவியின் சிறப்புக்கு அது கொண்டுள்ள பெரும் பகுதி நீரே காரணமாகும். இது மேல் வளைவிலிருந்து கீழ் நோக்கி விழும்போது உண்டாகும் நீரின் அமைப்பு, இதன் சிறப்புக்கு மற்றொரு காரணமாகும். இவ்வருவியில் பல அடி உயரம் காட்சியளிக்கும் வெண்ணிற நுரை உண்டா கின்றது. அருவியின் நிறமும் வெவ்வேறு ங் களில் வெவ்வேறு விதமாக இருக்கின்றது. காலத் துக்கு ஏற்றபடியும், காற்றடிக்கும் திசைக்கு ஏற்றபடி யும் அருவியின் வடிவம் மாறுகின்றது. நீர் இறங்கும் குதிரை லாட வடிவுள்ள பாறையில் ஏற்பட்டுள்ள ஒரு சிறு பிளவினால் இவ்வருவியின் வடிவம் மாறலாம். அதன் பயனாக அமெரிக்க அருவிக்குச்செல்லும் நீரின் அளவு குறையலாம் என் று சிலர் கருதுகின்றனர். 1764ஆம் ஆண்டிலிருந்து மேற் சொல்லப்பட்ட சிறு பிளவில் உள்ள பாறை ஆண்டுக்கு ஐந்து அடி யாகத் தேய்ந்து வந்தது. அத்தேய்வு மேலும் மிகாமல் வரவரக் குறைந்துகொண்டே வருகின்றது. எனவே, இதன் குதிரைலாட அமைப்புப் பெரிதும் பாதிக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/25&oldid=1692985" இலிருந்து மீள்விக்கப்பட்டது