உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 28 துணைப் பாடம் வேறு துறைகளுக்கும் பயன்படுகிறது. ஏறத்தாழ இருநூறு கல் வரையில் இம்மின்சக்தி கொண்டு செல்லப்படுகிறது. நயாகரா கோட்டை உ நயாகரா ஆறு தோன்றும் இடத்தில் உள்ள கிழக்குக் கரையில் பெரிய கோட்டை ஒன்று இருக்கின் றது. இஃது ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் பழமையுடையது. இது முதலில் பிரஞ்சுக்காரருக்கு. உரியதாக இருந்தது. பின்பு ஆங்கிலேயருக்கு உரிய தாயிற்று. அமெரிக்க சுதந்திரத்திற்குப் பிறகு இஃது அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இக் கோட்டையில் பிரஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் கட்டிய வரலாற்றுத் தொடர்புடைய கட்டடங்கள் இருக்கின்றன. ஏரிகளுக்குச் செல்லும் சிறப்புப் பாதையில் அமைந்திருத்தலால் இது வட அமெரிக்கா வில் சிறப்புக் கோட்டையாக விளங்குகிறது. போர்க் காலங்களில் இது சிறந்த படைத் தளமாக விளக்க முற்றது. நயாகரா அருவி (1) இங்கு நயாகரா அருவி என்பது ஒரு நகரத்தின் பெயராகும். து நயாகரா ஆற்றின் மேற்குக் கரை யில் குதிரை லாட அருவிக்கு எதிர்ப்பக்கத்தில் அமைந் திருக்கிறது. கனடாவைச் சேர்ந்த ஒன்டேரியோ மாகாணத்திலுள்ள வெல்லாண்டு கவுண்டி என்ற பகுதிக்கு இது, முதல் துறைமுக நகரம். இதன் மக்கள் தொகை 1941இல் ஏறத்தாழ இருபதாயிரத்து: அறுநூறாகும். இது புகைவண்டி நிலையம் அமையம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/29&oldid=1692989" இலிருந்து மீள்விக்கப்பட்டது