உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நயாகரா அருவி 29 பெற்றது. அண்மையிலுள்ள சிறப்பு நகரங்களுடன் இதற்கு மின்சார ரயில்வேயின் தொடர்பு உண்டு. அருவியைப் பார்க்க வரும் மக்கள் தொகையால் இவ் வூர் சிறப்புப் பெற்றுள்ளது. இவ்வூரில் மின்சக்தி யால் இயங்கும் தொழிற்சாலைகள் பல தோன்றியுள் ளன. டோரன்டோவுக்கும் நகரங்களுக்கும் பிற இங்கிருந்தே மின்சக்தி அனுப்பப்படுகின்றது. நயாகரா அருவி (2) இங்கும் இப்பெயர் ஒரு நகரத்தையே குறிக்கின் றது. இந்நகரம் நயாகரா ஆற்றின் வலக்கரை யோரம் அமைந்துள்ளது. இஃது அமெரிக்க ஐக்கிய மாகாணங்களுக்கு உரியது. இதுவும் முன்னதைப் போலவே புகைவண்டிப் பாதையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை ஏறத்தாழ எண்பதாயிரம். இந்நகரம் அமெரிக்க அருவிக்கு ஏழு கல் முன் னிருந்து அருவி வரைவில் ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ளது. மேலே சொல்லப்பட்ட மின்சக்தி யின் உதவியால் அங்குள்ள தொழிற்சாலைகளில் கோதுமை நொய், காஸ்டிக் சோடா, காகிதம், அலு மினியம், ரஸாயனக்கலவைகளால் ஆன பல பொருள் கள் முதலியன தயாரிக்கப்படுகின்றன. 1940ஆம் ஆண்டில் இப்பொருள்களின் மொத்த உற்பத்தி பத்து கோடி டாலருக்கு மேற்பட்டதாகும். 1916ஆம் ஆண்டிலிருந்து இந்நகர ஆட்சி அரசாங்க உயர் அலுவலர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள. து. 1856 இலிருந்து ரோமன் கத்தோலிக்கர்களால் நடத் தப்பட்டு வரும் நயாகரா பல்கலைக் கழகம் இங்கு இருக் கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/30&oldid=1692990" இலிருந்து மீள்விக்கப்பட்டது