________________
விக்டோரியா அருவி 47 களும் லிவிங்ஸ்டனைத் தத்தம் விருந்தினராக ஏற்று வேண்டிய வசதிகள் அளித்தனர். அடிமை வாணிகம் பழங்குடி மக்கள் வாழ்ந்த ஊர்களில் மக்களை விலைக்கு வாங்கி அயல் நாடுகளில் அடிமைகளாக விற்கும் வணிகர் கூட்டத்தை லிவிங்ஸ்டன் கண்டார்;. "மனிதனை மனிதன் அடிமை கொள்வதா!" என்று அலறினார். அ நிறைந்த அவரது உள்ளம் துடித்தது. அப்பெரியார் அவ்வணிகரது கொடுந்தொழிலை நயமாகக் கண்டித்து அறிவுரை புகன்றார். எனினும், தீத் தொழிலில் ஈடுபட்ட அவ் வணிகர்கள், கொடியோர் சிலரை ஏவி, அவர் உடைமை களைப் பறிக்கத் தூண்டினர். ஆயினும் அன்பே உருவாய அவரைக் கண்ட அத்தீயோர், செய்வது அறியாது விழித்தனர். அவர் தம் நிலையைக் கண்ட லிவிங்ஸ்டன், அவர்களிடம் அன்பாகப் பேசிப் பொதி மாடு ஒன்றைய பரிசாக அளித்தார். அத் தீயோர் மனமகிழ்ச்சியுடன் அவருக்கு வணக்கம் கூறி மறைந் தனர். லிவிங்ஸ்டன் மேலும் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் இச்செலவில் பன் முறை கடுங்காய்ச்சலால் துன்புற்றார். சிறிது உடல் நலம் பெற்றதும், அவர் *லோண்டா என்னும் நகரத்தை. நோக்கிச் செல்லலானார். அந்நகரத்திற்குத் தெற்கே இருந்த நிலப்பகுதி மிக்க வளம் பொருந்தியது. யாண்டும் புகையிலைப் பயிர் செழித்தோங்கி வளர் ந்
- Loanda