உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 துணைப் பாடம் திருந்தது. பலவகைப் பறவைகள் வான வுலகில் பறந்துகொண்டிருந்தன. பல இடங்களில் பல நிற மலர்கள் படர்ந்து கண்கொள்ளாக் காட்சியை நல்கின. ஆயின், இயற்கையழகு நிறைந்த அப்பகுதியில் பல சிற்றூர்கள் பாழ்பட்டுக் கிடந்தன. அச் சிற்றூர் களில் வாழ்ந்த மக்கள் அடிமை வாணிகரால் பிடித்துக் கொண்டு சொல்லப்பட்டமையே, அவை பாழ்பட்டிருந் தமைக்குக் காரணமாகும். இயற்கைக் காட்சி லோண்டாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த லிவிங்ஸ்டன் வழியில் வானளாவிய மலைகளையும், இடையிடையே குன்றுகளையும் கண்டார்; ஒவ்வொரு மலையிலும் வானுறவோங்கி வளம்பெற வளர்ந்திருந்த மரங்களைக் கண்டார். தளிர்விட்டுத் தழைத்தோங்கிக் கவிழ்ந்திருந்த பசுமரங்களின் தோற்றத்தாற் குன்று கள் பசிய மலைகளாகக் காட்சி அளித்தன. அம்மலை களிலிருந்து நீர்க்கோடுகள் கிழித்தாற் போலப் பூம்புனல் அருவிகள் பளிங்கு போலத் தெளிந்த நீருடன் விரைந்து வந்த காட்சி, லிவிங்ஸ்டன் உள்ளத்தை மகிழ்வித்தது. மலைவளம் சிறந்த அப்பகுதியில் இளங்காற்று மெல்லென வீசியது. கண் கொள்ளாக் காட்சியும், மெல்லிய இளங்காற்றும் உடல் நலம் குன்றியிருந்த லிவிங்ஸ்டனுக்கு உவப்பை அளித்தன. சாம்பசி பெரியாறு இங்ஙனம் செழுமை மிகுந்த நாட்டு வழியே இருந்த இயற்கை காட்சிகளைக் கண்குளிரக் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/50&oldid=1693010" இலிருந்து மீள்விக்கப்பட்டது