உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விக்டோரியா அருவி 49 மகிழ்ந்தவண்ணம் பிரயாணம் செய்த லிவிங்ஸ்டன், சாம்பசி ஆற்றின் கரையோரமாகச் செல்லலாயினர்; அங்ஙனம் சென்றவர், ஓரிடத்தில், நீலவானில் வெண் புகைப்படலம் போன்றும், பனிநீர்ப் படலம் பறப்பது போன்றும் அரியதொரு காட்சியைக் கண்டார்; அத் தோற்றம் எங்கிருந்து உண்டாயிற்று என்பதை அறிய விரும்பினார்; ஆற்றோரமாகவே சிறிது தூரம் நடந்து சென்றார். அவர் செவிகள் செவிடு படும்படி பேரோசை கேட்டது. அவர் மேலும் நடந்தார்; தமக்கு அரிய காட்சியையும், பேரோசையையும் நல்கியது ஓர் அருவியெனக் கண்டார். அவ்வருவியே விக்டோரியா அருவி என்பது. அவ்வருவி சாம்பசி ஆற்றைச் சேர்ந்தது. பெயரும் புகழும்

அதுகாறும் எந்த ஆங்கிலேயரும் பார்த்திராத யல இடங்களையும் பார்த்துப் பல விவரங்களை அறிந்து கொண்ட லிவிங்ஸ்டன், 1856ஆம் ஆண்டு (தாம் புறப் பட்ட பதினாறு ஆண்டுகளுக்குப் பின்பு) இங்கி லாந்தை அடைந்தார்; தாம் தென்னாப்பிரிக்காவில் கண்டறிந்த விவரங்களைக் கிருஸ்துவக் கழகத்தார்க்கு அறிவித்தார். ஆங்கில அரசாங்கமும் அவரது உழைப்பைப் பாராட்டி மகிழ்ந்தது. விடா முயற்சி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லிவிங்ஸ்டன் மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார்; எட்டு * லிவிங்ஸ்டன் அவ்வருவியை முதன் முதலில் கண்டு பிடித்தது 1855ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17ஆம் நாள் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/51&oldid=1693011" இலிருந்து மீள்விக்கப்பட்டது