உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருவிகள்

I முன்னுரை

பொருள்களின் இயக்கம்

நாம் உறக்கத்திலிருந்து எழும்பொழுது உடலில் அசைவு உண்டாகிறது. இதற்குப் பின்பே, நாம் உறக்கத்திலிருந்து எழுகின்றோம் என்னும் உணர்ச்சி நமக்கு உண்டாகின்றது; அஃதாவது, அசைவு அல்லது இயக்கம் என்பது மன வுணர்ச்சிக்கு முன் னரே உண்டாகின்றது. இந்த அசைவு இல்லா விடில், உலகத்தில் எப்பொருளும் விளக்கம் பெறுதல் இயலாது. விதையின் அசைவு இல்லாமல் பயிர் இல்லை. காற்று வீசும்போது மரம் அசைகின்றது. இவ்வாறே பாய்மரக் கப்பலும் அசைகிறது. 'ஒவ் வொரு பொருளும் இயக்கமுடையதாக இருக்கின் றது' என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு நாற்காலியைப் பாருங்கள் : அதற்குரிய மரம் ஒரு காலத்தில் அசைந்துகொண்டிருந்தது. அம்மரம் பின்னர் வெட்டப்பட்டது; பலகைகளாக அறுக்கப் பட்டது; நாற்காலியாகச் செய்யப்பட்டது. அந்த நாற்காலியிலுள்ள ஒவ்வொரு பகுதியும் பல அணுக் களால் ஆக்கப்பட்டது. ஒவ்வொரு அணுவும் எப் பொழுதும் இயங்கும் இயல்புடையது.

நாம் வாழும் இந்த நிலம் அசைவின்றி இருப்பது போலக் காணப்படுகின்றது. ஆனால் அது சூரியனைச் சுற்றிலும் மிக நீண்ட பிரயாணம் செய்துகொண்டிருக் கின்றது என்பதை நாம் அறிதல் வேண்டும். இங்ங

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/5&oldid=1692965" இலிருந்து மீள்விக்கப்பட்டது