________________
6 விக்டோரியா அருவி 51 வெஸ்ட்மின்ஸ்டர் அபே' என்னும் இடத்தில் மிக்க சிறப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இங்ஙனம் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காக் கண்டத் தின் உட்பகுதிகளைக் கண்டறியத் தமது அரிய வாழ்க்கையையும் ஆருயிரையும் தியாகம் செய் தார். அப்பெரியார் ஆப்பிரிக்காவைப் பற்றி எழுதிய நூல் களே, அவருக்குப் பின்னர் மேலும் பலர் ஆராய்ச்சி செய்யப் பெருந்துணை ஆயின. லிவிங்ஸ்டன் பிரயாணம் செய்த இடங்களில் வெள்ளையர் புகுந்து பழங்குடி மக்களை அடக்கியும், நட்புக் கொண்டும் படிப்படியாகக் குடியேறி வாழலாயினர். இன்று ஆங்கிலேயர் பிரஞ்சுக்காரர் முதலியோர் ஆப்பிரிக்காவில் குடியேறிப் பல பகுதிகளைப் பிடித்து ஆண்டுவருகின்றனர்; அங்குக் கிடைக்கும் பொன் முதலிய எல்லாப் பொருள்களையும் அநுபவித்து வருகின்றனர். இத்தகைய குடியேற்றம் மங்கோ பார்க்கு, லிவிங்ஸ்டன் இவர் தம் உழைப்புக்கு முன்பு ஏற்படவில்லை என்பதை எண்ணும் பொழுது, லிவிங்ஸ் டன் போன்ற பேரறிஞரது உழைப்பு அளித்த பயனை நன்கு உணரலாமன்றோ? லிவிங்ஸ்டனால் கண்டறியப்பட்ட விக்டோரியா அருவியைப் பற்றிய விவரங்களை அடுத்த பகுதியிற் காண்போம். ARG