உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 3. விக்டோரியா அருவி

  • ரொடீசியா மாகாணம்

டேவிட் லிவிங்ஸ்டன் இருண்ட ள கண்டமாக்கிய கண்டத்தை அங்ஙனம் ஒளியுள் பிறகு, ஆங்கிலேயர் ஆப்பிரிக்காவில் பல இடங்களில் குடியேறிப் பல மாகாணங்களை அமைத்துக்கொண்டனர். அமைக்கப்பட்ட மாகாணங்களுள் ரொடீசியா மாகாணம் ஒன்றாகும். இம்மாகாணத்திற்றான் உலகப் புகழ்பெற்ற விக்டோரீயா அருவி அமைந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள டிரான்ஸ்வால் பகுதிக்கும் மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள தாங்கன்ஈகா ஏரிக்கும் இடைப்பட்ட மேட்டுப் பாங்கான நிலப்பகுதியே ரொடீசியா என்பது. இந்நிலப்பகுதி வெள்ளையர் குடியேற ஏற்ற இடம் என்பதைக் கண்டறிந்து சொன்னவர்ரோட்ஸ் என்பவர் ஆதலால், இந் நிலப்பகுதி அவர் பெயரால் 'ரொடீசியா' என வழங்க லாயிற்று. இம்மாகாணத்தில் உள்ள வெள்ளையர் தொகை நா ற்பதாயிரம்; பிற மக்கள் தாகை பதினெட்டு லட்சம். இம்மாநிலம் இங்கிலாந்தைப் போல ஏறத்தாழ ஒன்பது மடங்கு பரப்புடையது. இம் மாகாணத்தில்தான் சாம்பசி என்னும் பேரியாறு பாய்கின்றது. இம்மாநிலத்தில் இரண்டாயிரத்து ஐந்நூறு மைல் நீளமுள்ள இருப்புப்பாதை போடப் பட்டுள்ளது. எண்ணாயிரம் கல் தொலைவு தந்திப் போக்குவரவு அமைந்துள்ளது. இம்மாகாண நகரங் களுள் புலவயோ' என்பது ஒன்று. அது கடல்

  • Rhodesia

† Rhodes

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/54&oldid=1693013" இலிருந்து மீள்விக்கப்பட்டது