உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விக்டோரியா அருவி 53 மட்டத்துக்கு நாலாயிரம் அடி உயரத்தில் அமைந் துள்ளது. ரொடீசியா புல்வெளிகள் நிறைந்த நிலப்பகுதி ஆதலால் இங்குக் கால் நடைகள் மிகுதியாக வளர்க்கப் படுகின்றன. இங்குப் பருத்தி, புகையிலை, கோதுமை, ஐரோப்பிய நாட்டுப் பழங்கள் முதலியன நன்கு பயிராகின்றன. இங்குச் சுரங்கச் செல்வமும் உண்டு. இருபது ஆண்டுகளில் ஐம்பது லட்சம் பவுன் பெருமானமுள்ள தங்கத்தை இம்மாநிலம் ஏற்றுமதி செய்துள்ளது எனின், இந்நிலப்பகுதியின் பொன் வளத்தை என்னென்பது! மேலும் இப்பகுதியி லிருந்து செம்பு, ஈயம், வெள்ளி, நிலக்கரி முதலிய கனிப் பொருள்கள் ஆண்டு தோறும் வெட்டி யெடுக்கப்படுகின்றன. சாம்பசி ஆறு ஆப்பிரிக்காவில் பாயும் ஆறுகள் பல. அவற்றுள் அளவில் நான்காவது ஆறு என்று சிறப்பித்துக் கூறப்படுவது சாம்பசி. இது கிழக்கு முகமாக இந்துப் பெருங்கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளுள் மிகப் பெரியது. இதன் நீளம் ஏறத்தாழ 2200 கல். இப் பேரியாறு ரொடீசியா• மாகாணத்தின் வடகோடியில் தோன்றுகிறது. இவ்யாறு ஐயாயிரம் அடி உயரத்தி லுள்ள காடும் மேடுமாகிய நிலப் பகுதியில் பாய்ந்து ஓடுகின்றது. ஆப்பிரிக்காவிலுள்ள பிற ஆறுகளின் நீரைப் போலவே இதன் நீர்ப்பெருக்கும் கரிசலான வறண்ட நிலத்திலேயே சுரக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/55&oldid=1693014" இலிருந்து மீள்விக்கப்பட்டது