உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 துணைப் பாடம் உயர் நிலத்தில் பாயும் சாம்பசி சாம்பசி ஆறு முதலில் தென் மேற்காக நூற்று ஐம்பது கல் பாய்கின்றது; பின்பு நேராகத் தெற்கே பாய்ந்து வருகின்றது. அந்நிலையில் பல சிற்றாறுகள் இரு பக்கங்களிலிருந்தும் இதனிற் கலக்கின்றன. பின்னர்ச் சாம்பசி ஆறு குறுகிய வடிவம் தாங்கி இயற்கைக் காட்சிகளுக்கு இடையே மிக்க விரைவுடன் பாய்ந்து வருகின்றது. இங்ஙனம் பாய்ந்து வரும் ஆறு திடீரென நூறு முதல் முந்நூற்றைம்பது கெஜம் வரையிலும் தனது பரப்பில் அகன்று செல்லு கின்றது. 'காகஞ்சி' என்னும் இடத்திற்கு அருகில் இந்த ஆற்றின் பற்பல நீரோட்டங்கள் ஒன்றுகூடி, சௌபுமா அருவிகளாக விழுகின்றன. இங்கு இவ்யாறு இரண்டு மலைப் பாறைகளுக்கிடையே மிக்க விரைவுடன் பாய்கின்றது. நடுநிலத்தில் பாயும் சாம்பசி 6 குவாண்டோ என்னும் இடத்திற்கு இப்பால் விக்டோரியா அருவி அறுபது கல் தொலைவிலுள்ளது. சாம்பசி ஆறு பாய்கின்ற இவ்விடத்தில் பல நீரூற்றுக் கள் பல திசைகளிலிருந்தும் வந்து கலக்கின்றன. இங்குச் சாம்பசியாறு நேரே செல்லாது கோண வடிவத்தில் சிறிது தூரம் சென்றும், நேர்வடிவத்தில் சிறிது தூரம் சென்றும் அழகிய காட்சியை அளிக் கின்றது. தாழ்ந்த நிலத்தில் பாயும் சாம்பசி நடு நிலத்திலிருந்து தாழ்ந்த நிலத்தில் பாய்ந்து செல்லும் சாம்பசியாறு படகுப் போக்குவரவுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/56&oldid=1693015" இலிருந்து மீள்விக்கப்பட்டது