________________
தடையின்றி விக்டோரியா அருவி 55 உதவுகின்றது. கோடைக்காலத்தில் இவ்யாற்றின் போக்கில் சிற்சில பகுதிகளில் வறட்சி தென்படுவதால் படகுப் போக்கு வரவு தடைப்படுவது உண்டு. மலைப்பாங்கான இடங்களில் பாறைகளைக் கடந்து தாவி வரும் இப்பேரியாறு, கடலை நெருங்க நெருங்கப் பற்பல கிளைகளாகப் பிரிந்து, கடலோரத் தில் பரந்த டெல்டாவை உண்டாக்குகின்றது; கடற் கரையருகில் நான்காகப் பிரிந்து கடலில் கலக்கின்றது. படகுப் போக்குவரவு ஆப்பிரிக்காவிலுள்ள பிற ஆறுகளைப் போலவே சாம்பசியாறும் இடையிடையே நீரருவிகளாலும், நீரோட்டங்களாலும், மணற்குவியலாலும் படகுப் போக்குவரவுக்கு ஏற்றவாறு அமையவில்லை. ஆயினும் ஏறத்தாழ 1620 கல் அளவு படகு போக்கு வரவு செய்ய இப்பேரியாறு பயன்படுகிறது. இதன் துணையாறுகளும் இவ்வாறே படகுப் போக்கு வரவுக்குப் பயன்படுகின்றன. சுருங்கக் கூறின், சாம்பசி ஆற்றிலும், அதன் துணையாறுகளிலும் படகு வாணிகம் சிறப்புற நடைபெறுகின்றது. கண்டறிந்த பெருமக்கள் கி. பி. 1851-53 இல் டேவிட் லிவிங்ஸ்டன் என் பவரே முதன் முதலில் சாம்பசியாற்றின் போக்கை அறிந்து உலகுக்கு அறிவித்தவர். மேலும் *மேஜர் செர்பா பிண்டோ என்ற பெரும்படைத் தலைவர் 1878இல் சாம்பசியாற்றின் மேற்குத் துணையாறுகளை யும் விக்டோரியா அருவியின் அளவுகளையும் கண்டறிந் தார். 1889இல் + ரான்கின் என்ற மற்றொரு பெரியார், * Major Serfa Pinto † Rankin