________________
56 துணைப் பாடம் சாம்பசியாறு கடலொடு கலக்கும் இடங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டார். கி.பி. 1895-96இல் *மேஜர் ஹில் கிப்பன்ஸ் என்ற படைத் தலைவரும் அவர் தம் படைவீரர்களும் சாம்பசி நடு நிலத்தில் பாயும் இடங்களில் ஆராய்ச்சிகள் நடத்தினர். விக்டோரியா அருவி நயாகரா அருவிக்கு அடுத்த நிலையில் உலகச் சிறப்புப் பெற்றது விக்டோரியா அருவியேயாகும். இவ்வருவி சாம்பசி ஆற்றுப் போக்கின் நடு இடத்தில் 26 டிகிரி கிழக்குத் தீர்க்கரேகையும் 18 டிகிரி தென் அட்ச ரேகையும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது; தென் ஆப்பிரிக்காவிற்கும், பெல்ஜியன் காங்கோவுக் கும் இடையில் கேப்டவுனிலிருந்து கெய்ரோவுக்குச் செல்லும் புகைவண்டிப் பாதையில், கேப்டவுனி லிருந்து ஆயிரத்து அறு நூற்று நாற்பத்திரண்டு கல் தொலைவில் அமைந்திருக்கின்றது. இவ் வருவியை முதன் முதல் கண்டறிந்த பெருமை டேவிட் லிவிங்ஸ்டனையே சாரும் என்பது முன்னரே கூறப் பட்டதன்றோ? அவர், தம் காலத்தில் இங்கிலாந்தின் அரசியாராக விளங்கிய விக்டோரியா அம்மையாரைச் சிறப்பிக்கும் முறையில் இவ்வருவிக்கு விக்டோரியா அருவி என்று பெயரிட்டார். . சாம்பசியாறு அருவியாக விழத்தொடங்கும் இடத்தில் இதன் அகலம் ஒரு கல் அளவுக்கு மேற் பட்டதாகும். அவ்விடம் ஒரு செங்குத்தான பாறை *Major Hill Gibbons