________________
60 வியத்தகு மாற்றம் துணைப் பாடம் விக்டோரியா அருவி நீர், முன்பு சொல்லப்பட்ட வாறு நானூறு அடிக்குக் கீழே உள்ள பாறைப்பகுதி யில் விழுந்ததும், எதிரிலே உள்ள உயர்ந்த பாறைச் சுவர்களுக்கு இடையே பாய்ந்து செல்லுகிறது. அச் சுவர்கட்கு இடையில் ஆற்று நீர் செல்லும் பாதை சில இடங்களில் இருநூறு அடி அகலமுடையது; சில இடங்களில் முன்னூறு அடி அகலமுடையது. ஆனால் நீர் மட்டத்திற்குக் கீழ் உள்ள பாறைச் சுவர் களின் உயரம் தெரியவில்லை. ஏறத்தாழ ஒரு கல் அகலமும் மிகுந்த ஆழமும் உடைய சாம்பசி என்னும் பேரியாறு கண் இமைக்கும் நேரத்திற்குள் இங்ஙனம் உருமாறிவிடுதல், இப்பேரியாற்றுப் போக்கில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாறுதலாகும். சாம்பசி ஆற்று நீர் அருவியாக விழுந்தவுடன் ஒரு திசையிலேயே அமைதியாகச் செல்வதை விட்டுப் பாறைகளின் இடையீட்டால் மோதிச் சிதறுண்டு மிக்க விரைவுடன் பல திசைகளிலும் பாய்ந்து ஓடத் தொடங்குகிறது; கரடு முரடான பாறைச் சுவர்களுக்கு இடையே அகப்பட்டு, அவற்றிலிருந்து தப்பி ஓட முயல்வது போல இப்பேரியாற்றுப் பெருவெள்ளம் பாறைகளுக்கு இடையே அமைந்த முன் சொல்லப் பட்ட குறுகிய பாதையில் கரை புரண்டு பாய்கின்றது. துன்பநிலை இங்ஙனம் அலைமோதிப் பாய்ந்து செல்லும் பெரு வெள்ளம் ஓரிடத்தில் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, சிறிது தொலை சென்ற பின்னர் ஓர் உருவம் தாங்கிச்