________________
விக்டோரியா அருவி 61 செல்கிறது. பாவம்! செல்வ வளத்துடன் வாழ்ந்த ஒருவன் காலப் போக்கில் வறுமையுற்று, பிழைப்புக் காகத் தகாத இடத்தில் வேலையில் அமர்ந்து அடக்க ஒடுக்கத்துடனும், குமுறிய உள்ளத்துடனும் இயங்கு தல் போல, அமைதியும் அகற்சியும் பெற்றிருந்த சாம் பசி யாறு அருவியாக மாறியவுடன் பாறைகளுக்கு இடையே அமைந்த குறுகிய பாதையில் தன் தோற் றப் பொலிவினை இழந்து பெருமுழக்கத்துடன் செல்ல நேர்கின்றது. இத்துடன் இதன் ஒடுக்கம் நிற்கவில்லை. இது மேலும் ஒடுங்கிச் செல்லும் நிலைமை அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது. முன் சொன்ன பாறைச் சுவர்களுக்கு இடையே அமைந்த குறுகிய பாதையை விடக் குறுகலான பாதையில் இப் பேரியாறு பாயும் துன்பநிலையும் ஏற்படுகின்றது. இங்ஙனம் குறுகிய வழியில் மிக்க ஆழத்துடனும் அமைதியின்மையுடனும் பாயும் சாம்பசி ஆறு, மற்று மொரு பாறைமீது பாய்ந்து மோதுண்டு நீர்ச் சுழல் களை உண்டாக்கிக்கொண்டு, தாக்குண்ட அரியேறு பெருமுழக்கம் செய்வதைப் போலப் பயங்கர ஓசை யோடு முன் நோக்கிப் பாய்கின்றது. ஆற்றுநீர் இங்ஙனம் பல குறுகிய பாதைகளில் செல்லும்போது, அப்பாதைகளின் அமைப்புக்கு ஏற்ப மேற்குப்புறத்திலிருந்து பாய்ந்து, திடீரெனத் திரும்பி மீண்டும் கிழக்குப் பக்கமாகப் பாய்ந்து, பள்ளத்தாக் கின் வழியே வளைந்து வளைந்து செல்லுகிறது. இங்ஙனம் சாம்பசி ஆறு ஏறத்தாழ நாற்பது கல் தொலைவு குறுகிய பாதை வழியே சென்று பாறைப் பீடபூமியை அடைகின்றது. இவ்வாறு பாறைகளுக்