உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 துணைப் பாடம் கிடையே செல்லும் ஆற்று நீர் நாற்பது கல் தொலைவு வரை மக்களுக் கு ப் பயன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அருவியாக உரு மாறுவதற்கு முன் வரையில் சாம்பசி ஆறு நீர்ப்பாசன வேலைகளுக்குப் பெரிதும் பயன்படுகின்றது; பரந்த நிலப்பரப்பை மிக்க வள முள்ள தாக்குகின்றது. ஆயின், இஃது அருவியாக உருக்கொண்ட பின்பு, முன்பு சொல்லப்பட்டவாறு நாற்பது கல் வரையில் பயனற்றுப் போகின்றது. இப்பாதையில் ஆற்றின் குறுக்கே அறுநூற்று ஐம்பது அடி நீளமுள்ள பாலம் ஒன்று கட்டப்பட் டுள்ளது. இப்பாலம் 1905ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. து கேப்-கெய்ரோ இருப்புப்பாதையை இணைக்கின்றது. இப்பாலம் ஆற்று நீர் மட்டத்தி லிருந்து நானூறு அடி உயரத்தில் அமைந்திருக் கிறது. மழைக் காடு விக்டோரியா அருவிக்கு மேற்கே பல கல் தொலைவு பரவியுள்ள ள கணவாயில் உயர்ந்து ஓங்கிய மரங்களும், மலர்களைத் தாங்கி மென் காற்றில் அசைந் தாடும் கொடிகளும் முட்செடிகளும் புல்பூண்டுகளும் காட்சியளிக்கின்றன. அவை அனைத்தும் விக்டோரியா அருவி தெளிக்கின்ற நீர்த்துளிப் படலத்தில் மின்னிப் பொலிகின்றன. இப்பகுதிக்கு *மழைக்காடு என்பது. பெயராகும்.

  • Rain Forest
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/64&oldid=1693025" இலிருந்து மீள்விக்கப்பட்டது