உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விக்டோரியா அருவி 63 இம்மழைக் காட்டில் மழைத்துளிகளை உதிர்க்கும் மரம் செடி வகைகளும், வேரோடு சாய்ந்த மரங்களும் காணப்படுகின்றன. மற்றும் உலர்ந்த வழுக்கற் பாறைகள் ஆங்காங்கே தோன்றுகின்றன. அப்பாறை களின் ஊடே நடைபாதை செல்லுகின்றது. அப் பாதையிற் செல்லுங்கால் மழைக்காட்டின் நிகரற்ற அழகும், மலைமுகடுகளின் உயர்ச்சியும் வழிப்போக்கர் விழிகட்கு விருந்தாக அமைகின்றன. மழைக் காட்டுத் தரைப்பகுதி, கால் சேற்றில் அழுந்தக் கூடிய சதுப்பு நிலமாகும். அங்குக் குளிர் மிகுதி. அங்குச் செல் வோர் குளிரைத் தடுக்கத் தக்க உடைகளை எடுத்துச் செல்லுதல் வேண்டும். கண் கவரும் காட்சிகள் மழைக் காட்டின் மேற்குக்கோடியிலிருந்து விக் டோரியா அருவியின் ஒருபகுதியான *பேய் அருவி யைப் பார்க்கலாம். அதன் நீர்த்துளிகள் மீன்களைப் போல் துள்ளி ஒளிரும். பேய் அருவியை அடுத்த பெரிய அருவியை இடப்புறத்தும், மழைக்காட்டை அடுத்த கருநிற முகட்டை வலப்புறத்தும் கண்டு மகிழலாம். பேய் அருவி என்பது சாம்பசியின் பிற அருவி களைவிட மிக்க விரைவுடன் கீழ் நோக்கிப் பாய் கின்றது; மலைமுகட்டின் கோடிவரை திரை தள்ளி நுரை கக்கிப் பாய்கின்றது; மலையிலிருந்து தெறித்து விழும்போது வெள்ளை வெளேரென்ற பல்லாயிரக் நீர்த்துளிகளை நாலா பக்கங்களிலும் கணக்கான

  • Devil's Cataract
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/65&oldid=1693026" இலிருந்து மீள்விக்கப்பட்டது