உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 7. வளம்பெற வளர்ந்து, தன் முடியால் பருகுதற்கினிய இளநீரையும், உண்பதற்குரிய தேங்காயையும் கொடுத்து நம்மை மகிழ்விக்கின்றது. இன்று பார்க் கும் கோழி முட்டையிலிருந்து சில நாட்களுக்குப் பிறகு நமது பெருவியப்புக்கிடையே ஒரு குஞ்சு, வெளிப்படுதலைக் காண்கின்றோம். இந்த அரிய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அடிப்படை யாது? இயக்கம்: இயற்கையும் செயற்கையும் கண்ணன் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைப் படிக்க விரும்புகிறான். அவ்விருப்பம் எழவே, அவன் அப் புத்தகம் உள்ள இடத்திலிருந்து அதனை எடுக்கின் றான்; அஃதாவது, கண்ணன் அப்புத்தகத்தை இயங்கச் செய்கிறான். அவன் ஏன் அதனை இயங்கச் செய் கிறான்? அவன் அதனைப் படிக்க விரும்புகிறான் என் யதே காரணமாகும். அவனுக்கு அதனைப் படிக்க வேண்டுமென்னும் விருப்பம் உண்டாகிறது. அந்த விருப்பத்துக்குக் கைகள் பணிகின்றன. அஃதாவது மனத்தின் விருப்பப்படி இயக்கம் தோன்றுகிறது. இவ் வாறு நம் விருப்பப்படி உண்டாகும் இயக்கங்கள் பல. நாம் கடுகளவும் விரும்பாமலும், நமக்குத் தெரியா மலும் நமது உடம்பிற்குள் நடைபெற்றுவரும் இயக் கங்கள் பலவாகும். அவற்றுள், நாம் மூச்சு விடுதலும், உணவு செரித்தலும், உடல் வளர்ச்சியடைதலும் சில வாகும். காற்றின் இயக்கமும், ஓடை நீரின் இயக்கமும், விண்மீன்களின் இயக்கமும் பிறவும் எவ்வாறு நடை பெறுகின்றன? இக்கேள்விக்கு விஞ்ஞானி கூறும் விடை யாது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/7&oldid=1692967" இலிருந்து மீள்விக்கப்பட்டது