உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிவசமுத்திர அருவி 73 பாய குடகு நாடு குறிஞ்சி நிலச் சிறப்புடையது. ஆதலால் கா விரி ஆறு மலைகளின் ஊடே வேண்டுவதாக இருக்கின்றது. அந்நிலையில் அஃது இரு மருங்குகளிலும் உயர்ந்த பாறைகளுக்கு இடையே வளைந்தும் நெளிந்தும் பாய்கின்றது. இயற்கை அன்னை கொலு வீற்றிருக்கும் குறிஞ்சி நிலப்பகுதியில் இங்ஙனம் காவிரி வளைந்தும் நெளிந்தும் செல்லுதல் பேரழகைத் தருகின்றது. இவ்வாறு குறிஞ்சி நிலப் பகுதியில் ஒல்கி ஒசிந்து வரும் காவிரியாறு நாட்டை விட்டு மைசூர் நாட்டில் புகுகின்றது. மைசூர் நாட்டில் காவிரி டகு. மைசூர் நாட்டில் புகுந்த காவிரி சிறிது தொலைவு: மலைப்பாங்கான பகுதியில் பாய்கின்றது; குறுகிய பாறைகளுக்கிடையே ஓடுகின்றது. அ ங் கு அத னுடன் ஹேமாவதி என்னும் துணையாறு ஒன்று கலக் கின்றது. சிறிது தொலைவிற்கப்பால் இலட்சுமண தீர்த்தம் என்னும் மற்றொரு சிற்றாறு காவிரியில் கலக் கின்றது. இச்சிற்றாறுகளின் சேர்க்கையால் காவிரி யாறு அளவில் பெரியதாகிப் பாய்கின்றது. இம்முக் கூடலின் மறுமுனையில் கண்ணம்பாடி என் னு அணை கட்டப்பட்டுள்ளது. இவ்வணைக்கட்டை அடுத்துப் பெரிய நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அதன் பெயர் கிருஷ்ண ராஜ சாகரம் என்பது. இந் நீர்த்தேக்கத்தால் மை சூ ர் நாடு பெற்றுவரும் பயன்கள் அளவற்றன. இவ்வணைக்கட்டு மைசூரி லிருந்து பதினொரு கல் ெ தொலைவிலுள்ளது; ஒரு லட்சத்து இருபதாயிரம் சதுர மைல் பரப்புள்ள தரிசு ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/75&oldid=1693034" இலிருந்து மீள்விக்கப்பட்டது