இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
74 துணைப் பாடம் நிலங்களைச் செழுமைப்படுத்துகிறது. மைசூரின் செழு மைக்கு இந்நீர்த்தேக்கமே சிறந்த காரணமாகும். பிருந்தாவனம் கிருஷ்ண ராஜ சாகரத்தை அடுத்துப் பிருந்தா வனம் என்னும் பெரிய பூங்கா அமைந்துள்ளது. மைசூரிலிருந்து இப்பூங்காவுக்குச் செல்லும் பாதை பிருந்தாவனம் செம்மையான முறையில் பாதுகாக்கப்படுகின்றது. அப்பாதை நெடுக விளக்குகள் போடப்பட்டுள்ளன. இப்பொழுது பிருந்தாவனம் அமைந்துள்ள இடம் மலேரியா நோய்க்குக் காரணமான சதுப்பு நிலமாக இருந்தது. கிருஷ்ண ராஜ சாகரம் அமைக்கப்பட்ட பிறகு இப்பகுதி மைசூர் அரசாங்கத்தின் பெருமுயற்சி யால் கண்கவரும் பூங்காவாக மாறிவிட்டது.