உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிவசமுத்திர அருவி

________________

சிவசமுத்திர அருவி 75 இப்பூங்காவின் முகப்பு வாயில் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. பச்சைக்கம்பளம் பரக்க விரித்தாற் போன்ற இப்பூங்கா, முகப்பிலிருந்து படிப் வடியாகத் தாழ்ந்துகொண்டே போகும் முறையில் பல அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்கண் நீரூற்று - பிருந்தாவனம் இரண்டு நடைபாதைகள் போடப்பட்டுள்ளன. தாழ்ந்து செல்லும் படிதோறும் நீர் ஓடி வருமாறு வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு படியின் கீழும் பலநிற மின் விளக்குகள் இருந்து ஓடும் நீரை ஒளி செய்கின்றன. ஒவ்வொரு நடைபாதையின் இரு மருங்கிலும் அழகிய செடிகள் வைத்து ஒரே அளவில் கத்தரிக்கப்பட்டுள்ளன. இ வை விளக் கொளியில், மரகதத்தால் அமைக்கப்பட்ட திண்ணை கள் போலத் தோன்றுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/77&oldid=1693038" இலிருந்து மீள்விக்கப்பட்டது