________________
76 உடைய துணைப் பாடம் இப்பூங்காவில் ஆங்காங்குப் பல நிறங்களை மலர்ச் செடிகளும், மரங்களும் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. மக்கள் இருத்தற்கேற்ற சிமென் இருக்கைகள் ஆங்காங்குப் போடப் பட்டுள்ளன. பகற்பொழுதில் சாதாரண சிமென்டுப் பலகையாக இருப்பது, இரவில் அதனைக் சுற்றி அமைக்கப்பட்டுள்ள விளக்குகளின் ஒளியால் கண் கவரும் தோற்றத்தை அளிக்கின்றது. பல நிற மலர்ச் செடிகளைக் கொண்ட பாத்திகள் பல நிற விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டு, இரவில் கண்ணுக்கினிய காட்சி வழங்குகின்றன. பூங்கா முழுவதும் மின் விளக்குகளின் உதவியால் பலநிற நீரூற்றுக்களாக விளங்குகின்றன. அவை அடிக்கடி பல்வேறு நிறங்களை மா றிமாறித் தோற்றுவிக்கின்றன. அவ் வொளியில் காணப்படும் நீர்த்துளிகள் பலநிற மணிகளைப் போலக் காட்சியளித்துப் பார்ப்பவர் விழிகட்கு விருந்தாக அமைகின்றன. அணைக்கட்டுச் சுவரில் தரை மட்டத்துக்கு இருப தடி அளவில் காவிரி அன்னையின் சிலை வைக்கப்பட் டுள்ளது. அச்சிலை கருங்கல்லால் இயன்றது. நீலநிற விளக்குகளின் ஒளியில் அச்சிலை பேரழகுடன் தோற்ற மளிக்கிறது. நீர்த்தேக்கத்தில் உள்ள காவிரி நீர் அணையை ஊடுருவிக் கொண்டு வந்து காவிரியன்னை யின் உள்ளங்கையிலிருந்து எப்பொழுதும் வெளிப் படுமாறு அமைத்துள்ள திறம் பாராட்டற்பாலது. கண்ணம்பாடிக்கு அப்பால் கண்ணம்பாடி அணையில் கட்டுப்படுத்தப்பட்ட காவிரி, பிறகு மிக்க விரைவுடன் பாய்கிறது.