உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழ நாட்டில் சிவசமுத்திர அருவி 81 குடகு நாட்டில் தோன்றிய காவிரி, மைசூர் நாட்டு வழியே கொங்குநாட்டை அடைந்து, சோழ நாட்டில் புகுகின்றது. இதுகாறும் பல துணையாறு களைப் பெற்று நீர்வளத்துடன் வந்த காவிரி, திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் என்ற கிளையாற்றைத் தோற்றுவிக்கின்றது. இங்ஙனம் கொள்ளிடம் பிரிவதற்கு முன்னுள்ள காவிரியாறு மிக அகன்று காணப்படுவதால் அகண்ட காவிரி எனப் பெயர் பெற்றுள்ளது. இவ்விடத்தில் காவிரியாற்று அகலம் ஏறத்தாழ ஒரு கல் என் று சொல்லலாம். இங்ஙனம் பிரிந்து செல்லும் காவிரியையும் கொள்ளிடத்தையும் உள்ளாறு என்ற வாய்க்கால் இணைக்கின்றது. இதனால் இங்கு ஒரு தீவு அமைந்துள்ளது. தீவிற்றான் திருவரங்கம், திருவானைக்கா என்னும் பாடல்பெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. பல கிளையாறுகள் இத் இங்ஙனம் உள்ளாறு காவிரியையும் கொள்ளிடத் தையும் இணைக்குமிடத்தில் காவிரிக்குக் குறுக்கே பெரிய அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் பெயர் கல்லணை என்பது. கல்லணைக்கு அப்பால் காவிரி பற்பல சிற்றாறுகளாகப் பிரிகிறது. அவற்றுள் வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரிசிலாறு, வீரசோழனாறு, வடவாறு, பாமணியாறு, திருமலை ராஜன் ஆறு என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றி லிருந்து நூற்றுக்கணக்கான கல் தொலை வு கால் வாய்கள் வெட்டுப்பட்டுள்ளன. இங்ஙனம் காவிரி 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/84&oldid=1693044" இலிருந்து மீள்விக்கப்பட்டது