உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 துணைப் பாடம் தன் நீரைக்கொண்டும் தன் கிளையாறுகளின் நீரைக் கொண்டும் தஞ்சை மாவட்டத்தின் பெரும் பகுதியை நீர் நாடாகச் செய்து, இறுதியில் வரலாற்றுப் புகழ் மிகுந்த காவிரிப்பூம்பட்டினம் என்னும் பண்டைச் சோழர் தலைநகர் இருந்த இடத்தில் வங்கக்கடலில் இரண்டறக் கலந்துவிடுகிறது. 2. மின்சார உற்பத்தி நிலையம் கிருஷ்ண ராஜ சாகரம் கண்ணம்பாடி அணையினால் உண்டாகியுள்ள நீர்த் தேக்கத்தின் பெயர் கிருஷ்ண ராஜ சாகரம் என்பது. இது கிருஷ்ண ராஜேந்திர உடையார் என்ற மைசூர் நாட்டு மன்னர் ஆதரவினால் ஏற்பட்டது ஆதலால், அவர் பெயராலேயே வழங்கிவருகின்றது. இத் தேக்கம் 1911ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றுப் பதினாறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இத் தேக்கம் கட்டி முடிக்க ஏறத்தாழ இருநூற்றைம்பது லட்சம் ரூபாய் செலவாயிற்று. இத்தேக்கம் கற்க ளாலும் சிமென்டினாலுமே கட்டப்பட்டுள்ளது. இது எண்ணாயிரத்து அறுநூறு அடி நீளமும் நூற்று முப்பதடி உயரமும் உடையது. இதன் இடையிடையே மின்சாரத்தால் இயங்கக்கூடிய பெரிய கதவுகளைக்கொண்ட மதகுகள் அமைந்துள்ளன. இம் முதகுகள் வழியாகக் காவிரியாற்று நீர் மிக்க விரை வாகப் பாயும் காட்சி பார்க்கத்தக்கது. இத்தேக்கத் திலுள்ள நீர், மைசூர் நாட்டை வளப்படுத்துவதோடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/85&oldid=1693045" இலிருந்து மீள்விக்கப்பட்டது