இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
சிவசமுத்திர அருவி 83 காவிரியாற்றில் வெள்ளம் இல்லாதபோது சிவ சமுத்திர மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தி தடைப்படாமல் பெருகவும் உதவி புரிகின்றது. மின்சார உற்பத்தி நிலையம் சிவசமுத்திர மின்சார நிலையம் சிவசமுத்திர அருவிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலை கிருஷ்ண ராஜ சாகரம் ள யத்தில் காற்றாடிகள் போன்ற அமைப்புள்ள உருளை கள் அமைக்கப்பட்டுள்ளன; அவை நீரின் உதவி யால் விரைந்து சுழலுமாறு செய்யப்பட்டுள்ளன. அருவிக்கு மேற்கே இரண்டு கல் தொலைவில் காவிரி யிலிருந்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அக் கால்வாய் வழியே இம்மின்சார நிலையத்துக்குக் காவிரி நீர் கொண்டுவரப்படுகிறது. ஆற்றிலிருந்து கால்வாய் பிரியுமிடத்தில் ஓர் அணை கட்டப்பட்டுள்ளது. அவ் வ