உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 துணைப் பாடம் வணை மின்சார நிலையம் அமைந்துள்ள நிலமட்டத்தை விட நானூறு அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. அதனால் அவ்வணையில் எப்பொழுதும் நீர் தேங்கி மின்சார உற்பத்திக்கு உதவுகிறது. ஆற்றில் வெள்ளம் வராத காலத்திலும் மின்சார உற்பத்திக்குத் தடை உண்டாகாமல் இருக்க, அவ்வணை பெரிதும் பயன்படுகின்றது. முன்பு சொல்லப்பட்ட கால்வாயின் குறுக்கே மதகுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஓரடி முதல் மூன்றரை அடிவரை குறுக்களவுள்ள பதின்மூன்று குழாய்கள் மதகுகளில் பொருத்தப்பட்டுள்ளன. இக் குழாய்கள் ஏறத்தாழ இருநூறு கெஜம் நீளம் மலைச் சரிவின் வழியே சென்று மின்சார நிலையத்தைச் சேரு கின்றன. மின்சார நிலையம் உள்ள இடம் தரை மட்டத்திலிருந்து மிக்க உயரத்தில் அமைந்திருப்ப தால், அங்குச்செல்வதற்கு இருப்புப்பாதை அமைக்கப் பட்டுள்ளது. அப்பாதையில் மின்சார உதவியால் டிராலி வண்டிகள் இயங்குகின்றன. அவை தேவை யான பொருள்களை மேலே எடுத்துச் செல்லப் பயன் வடுகின்றன. காவிரியாற்று நீரைக்கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் நான்கு மாடிகளைக் கொண்டது; ஏறத்தாழ நூறு அடி உயரமுள்ளது. மேலே சொல்லப்பட்ட குழைகள் மூலம் கொண்டுவரப் யடும் நீர், இந்நிலையத்திலுள்ள காற்றாடிகள்மீது மோதுகின்றது. அம்மோதலால் காற்றாடிகள் விரை வாகச் சுழல்கின்றன. அச்சுழற்சியால் உண்டாகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/87&oldid=1693047" இலிருந்து மீள்விக்கப்பட்டது