________________
சிவசமுத்திர அருவி 85 காந்த சக்தியிலிருந்து மின்சக்தி உண்டாக்கப்படுகி றது. இம்மின்சக்தியைத் திரட்டப் பல இயந்திரங்கள் வேலை செய்கின்றன. திரட்டப்பட்ட மின்சக்தியைப் பல இடங்களுக்கு அனுப்பப் பல இயந்திரங்கள் தொழிற்படுகின்றன. இங்ஙனம் தோற்றுவிக்கப்படும் மின்சக்தியின் உதவியால் மைசூர் நாடு தொழில் துறையில் சிறந்து விளங்குகிறது; பொருளாதாரத் துறையிலும் படிப்படியாக உயர்ந்துவருகின்றது. மின்சாரத்தின் பயன் சிவ சமுத்திர மின்சார நிலையத்திலிருந்து வெளிப்படும் மின்சக்தி மைசூர் நாட்டு வீடுகளிலும், தெருக்களிலும், கடைகளிலும், அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் விளக்கெரிக்கப் பயன்படு கின்றது. இஃதன்றி, இச்சக்தி பல தொழில்களை நடத்துவதற்கும் உறுதுணை செய்கின்றது. மின் சக்தியால் இயங்கும் இயந்திரங்களில் பஞ்சாலைகள் குறிப்பிடத்தக்கவை. பஞ்சாலைகளே அன்றிப் பட்டு நெசவும் மைசூர் நாட்டில் மின்சக்தியால் நடைபெறு கின்றது. மைசூர் நாட்டில் ஏறத்தாழ நாற்பதாயிரம் ஏக்கர் நிலம் கரும்புப் பயிர் செய்வதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது. கரும்பைக் கொண்டு சர்க்கரை தயாரிக் கும் தொழில் அங்கு மிகுதியாக நடைபெறுகின்றது. இத்தொழிலுக்கும் மின்சக்தி உதவிபு ரிகி றது. பத்திராவதியிலுள்ள பெரிய இரும்பு எஃகுத் தொழிற் சாலைகளுக்கும் மின்சக்தி பயன்படுகிறது. அவ்வூரி லுள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கும் மின்சக்தி உதவு கின்றது. சிவ சமுத்திர அருவி நீரால் தோற்றுவிக் கப்படும் மின்சக்தி சிறப்பாகக் கோலார் தங்கச் சுரங்