பக்கம்:அரை மனிதன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



106

அரை மனிதன்



சொல்வேன். மறுபடியும் அவர் பிறக்கப் போவதாகக் தான் சொல்லிக் கொள்கிறார்கள்."

"அவளை என் மகன் வைத்துக் கொள்வானா? ஏண்டா அந்த அளவுக்கு நீ கெட்டுவிட்டாயா?”

"இல்லேம்மா அப்படி உலகம் பேசும். அவள் என்னோடு இருப்பாள். அப்பொழுது உன்னைப்போல் இருக்கிறவர்கள் அப்படித்தான் பேசிக்கொள்வார்கள். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். அது என் தங்கைக்குச் செய்யவேண்டிய கடமை; அதனால் தான் அவன் வெளியே இருக்கவேண்டும்."

"பழி ஒரு இடம்; பாவம் ஒரு இடமா! இதை நான் ஒருக்காலும் ஒப்புக் கொள்ளமாட்டேன். நீ வெளியே வந்துதான் ஆகவேண்டும்".

"நான் வெளியே வந்து ஆக வேண்டியது இல்லை. அதை நான் உணர்கிறேன்"

"ஏசு சிலுவையில் அறையப்பட்டாரே ஏன் தெரியுமா?"

"அவரை யாரும் காப்பாற்ற முன் வராததால், அவள் அன்னை மரி சும்மா இருந்துவிட்டாள்."

"இல்லே'ம்மா மற்றவர்கள் பாவத்தைப் போக்க”

"அதற்காக நீ சிறை செல்லுவதை நான் ஏற்க முடியாது”

"உங்களால் அது முடியாது; தம்பி உன்னை விட்டுப் பிரிந்தான் உன்னால் தடுக்க முடிந்ததா? மேலே போகும் பொழுது உன்னால் தடுக்க முடியாது. கீழே விழும்போதும் உன்னால் தடுக்க முடியாது."

"அவன் மேலே போனால் ஏன் தடுக்க வேண்டும்?"

"சம நிலைதான் என்றைக்கும் நல்லது. ரொம்பவும் ஒரு சிலர் மேலே போவதால்தான் பலர் கீழே போகவேண்டி ஏற்படுகிறது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/108&oldid=1462005" இலிருந்து மீள்விக்கப்பட்டது