பக்கம்:அரை மனிதன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

109



"அந்தப் பாரதக் கதையில் குந்திதேவி கன்னனிடம் சென்று வரம் கேட்டாள் தெரியுமா?"

"அதைப் போல்"

"நீயும் அவனிடம் சொல்ல வேண்டும் . அவன் தாயை மறந்துவிட்டான். நீ அவனுக்குத் தாய் என்பதை முதலில் உணர்த்து."

"அப்புறம்"

"ஒரு முறை விட்ட அம்பை மறுபடியும் விடாதே என்று கேட்டாள்"

"அது போல்"

"அவன் செய்த தவறுகளையே மீண்டும் செய்ய வேண்டாம் என்று சொல்"

"அப்படி என்றால்"

"அது அவனுக்கு விளங்கும். உனக்குத் தெரியாது. இந்த அளவு பேசு. அவன் நிச்சியமாக இங்கு வருவான். உண்மையைச் சொல்லுவான். அவனுக்கும் நன்மை எனக்கும் நன்மை".

"நீ பேசுவது எனக்கு ஒன்றுமே புரியவில்லை."

"எனக்கு அந்தக் கூட்டத்திலேயே அவர்களிடம் கதை பேசிப் பழக்கம். அவர்களும் கதை சொல்வார்கள். அதனால் என்னால் எதையும் வெளிப்படையாகக் கூறமுடியாது. கதை வடிவில்தான் கூறமுடியும்."

6

அம்மா குந்தியானாள். குந்தி கன்னனிடம் சென்றாள். அம்மாகண்ணு அர்ச்சுனனோடு சென்றாள். தருமன் இங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/111&oldid=1462008" இலிருந்து மீள்விக்கப்பட்டது