பக்கம்:அரை மனிதன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

அரை மனிதன்


 “என் குடும்பத்தில் இவன் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர்கள் கஷ்டப்படும்போது மாதாமாதம் ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தான். அதை வைத்துதான் அவர்கள் குடும்பம் ஒரு வகையாக நடந்தது. நான் நொண்டி. நான் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.”

அதற்குள் அவன் இடைமறித்து “நான் ஒன்றும் அனுப்பவில்லை. நான் அனுப்பவில்லை என்பதைத்தான் இவர் இப்படிச் சுட்டுகிறார்” என்றான்.

“உண்மை. அவன் பணம்தான். அவன் அனுப்பியது தான் அவனுக்கு அது தெரியாது. பெரியவர்கள் பிறருக்கு உதவி செய்யும்போது இரண்டாம் பேருக்குத் தெரியாமல் செய்வார்கள் என்பதற்காக என் தம்பி எடுத்துக்காட்டு.”

“நான் அனுப்பவே இல்லை” என்றான்.

“அது இரண்டாம் பேருக்குத் தெரியாது. மாதாமாதம் அம்மாகண்ணுக்கு இவன் வரும் பொழுது பணம் கொண்டு வந்து தருவான். அவள் அதைத் தனக்கு என்று ஒரு காசும் எடுத்துக் கொள்ளமாட்டாள். அப்படியே குடும்பத்துக்கு அனுப்பி வந்தாள். ஆறுமாதம் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றியது என் தம்பிதான்”

அவன் தலைகுனிந்து நின்றான்.

“அதற்கப்புறம் இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றிய அம்மாகண்ணுவைப் பாராட்டி அவளுக்கு ஒரு நெக்லஸ் மாலையைப் பரிசாகத் தந்தான். அவள் அதை என்னிடம் காட்டி அதைப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்று கேட்டாள்.”

“அவனுக்குச் சொந்தம் இல்லாத நகையை அவன் எப்படிக் கொடுக்க முடியும். அதை முதலில் சேர்ப்பதுதான் நம் கடமை என்று உணர்த்தினேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/120&oldid=1462016" இலிருந்து மீள்விக்கப்பட்டது