பக்கம்:அரை மனிதன்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அரை மனிதன்


 "வேலை செய்து பிழைக்கக்கூடாதா?" என்றாள்.

"நொண்டி வேலை செய்வது தம்பி அகவுரவம்" என்றேன்.

"அப்படியானால் திருடலாமே" என்றாள்.

"தங்கள் மேலான புத்திமதியை ஏற்றுக்கொண்டேன். முதன்முதலில் உங்கள் வீட்டில்தான் ஆரம்பிக்கப் போகிறேன்’’.

அவள் இந்தப் பதிலை எதிர்பார்க்வில்லை. அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

அவன் வேகமாக வந்தான்.

"இன்னுமா நிற்கிறாய்?"

"ஒட முடியவில்லை" என்றேன்.

"அதைக் கேட்கவில்லை. இங்கே என்ன தகராறு செய்கிறாய்?”

"அம்மா என்னைத் திருடச் சொன்னார்கள். பிச்சை எடுக்க வேண்டாம் என்று சொன்னார்கள்."

"சரி போ; அதைச் செய்”

“உங்கள் வீட்டில் வந்து புகுந்து திருடப் போகிறேன்" என்றேன்.

அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

"கால் போனது எனக்கு; அது எனக்குக் கொடுக்கப்பட்ட பணம். அதை மூலதனமாக வைத்துத்தான் உன்னைப் படிக்க வைத்தோம். இப்பொழுது யார் திருடன் என்பதை அவளுக்கு எடுத்துச் சொல்.”

"அப்பொழுது நான் திருடன் என்று சொல்லுகிறாயா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/16&oldid=1149774" இருந்து மீள்விக்கப்பட்டது