பக்கம்:அரை மனிதன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அரை மனிதன்


 எனக்குத் தலையணை இல்லாமல் தூக்கம் வருவது இல்லை. இப்பொழுது அது அவசியமா என்றுகூட நினைப்பது உண்டு. பாய், துப்பட்டி இல்லாமல் வீட்டில் உறங்க மாட்டேன். அது இல்லாமல் தூங்க முடியும் என்பதைக் கற்றுக் கொண்டேன்.

இது என்ன பிழைப்பு. அவள் தான் என் தம்பி மனைவி. "திருடக் கூடாதா?" என்று கேட்டாள். அதே கேள்வியைத் தான் கேட்கிறேன். திருடினால் என்ன சே! பெரிய மனிதர்கள் செய்யும் அற்பத்தனத்தை நான் செய்ய விரும்பவில்லை. சட்டத்தின் உள்ளிருந்து பிறர் உழைப்பைத் திருடுகிறார்கள். நான் சட்டத்தின் வெளியே இருந்து அதைச் செய்தால் அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஏதோ ஒரு நாவலைப் படித்த கவனம். அதன் ஆசிரியர் மிக அழகாகப் பிரித்துக் காட்டி இருக்கிறார். சாதி இரண்டு வகைப்படும். உழைப்பவர்; மற்றவர் உழைப்பைத் திருடுபவர்; சுரண்டப்படுபவர். சுரண்டுகிறவர்கள் இப்படித்தான் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். திருடுகிறேன், பாவம் அவன் என்னைப் போலச் சுரண்டப்பட்டவனாக இருந்தால்! அது கொடுமை. அப்படித்தான் திருடிவிட்டால் நான் என்ன சாதித்துவிடப் போகிறேன். என் தங்கைக்கு, அவள் கணவன் இப்பொழுது என்னிடம் பேசமாட்டான். நான் அங்குச் சென்றால் தங்கைக்கு அவமானம். நொண்டி, முடம் எல்லாம் இங்கு வருவதற்கு இது என்ன மருத்துவமனையா? என்று கேட்பான். வாழ்க்கையில் ஒதுக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள் எப்படி அவர்களோடு ஒட்டி உறவு ஆட முடியும்?

திருடுவதும் சில சமயம் அவசியம்தான் என்று பட்டது. இல்லாவிட்டால் திருட வேண்டிய நிலைக்கு ஒரு சிலர் தள்ளபட்டிருக்கிறார்கள். என் கதை யார் எண்ணிப் பார்க்கப் போகிறார்கள். அங்கங்கே வீடு புகுந்து திருடுகிறார்கள். கொலைகள்கூட ஒன்று இரண்டு நடந்து விட்டதாகச் செய்தித் தாள்கள் செய்திகளைத் தருகின்றன. ஏன் இந்தச் செய்தி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/20&oldid=1461927" இலிருந்து மீள்விக்கப்பட்டது