பக்கம்:அரை மனிதன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

27



எனக்கு அவளிடம் எந்தவிதமான வெறுப்பும் தோன்ற வில்லை. என்னைப்போலவே அவளும் ஒரு நொண்டி தானே. நான் காலை இழந்தேன். அவள் ஏதோ ஒன்றை இழந்தாள். அவ்வளவுதானே வித்தியாசம். நான் குடும்பத்தில் ஒதுக்கப்பட்டேன். அவள் சமூகத்தில் ஒதுக்கப்பட்டாள்.

அவள் என்னிடம் நெருங்குவாள். நானும் அவளிடம் என்னையும் அறியாமல் ஒதுங்கினேன்.

இந்த உறவுதான் என்னை அந்த இடத்தைவிட்டு நீங்க மனம் இடம் கொடுக்காமல் செய்து விட்டது. அவள் சொன்னாள். 'நானும் முதன் முதலில் இதே பிளாட்பாரத் தில்தான் இறங்கினேன். ஏன் ஊரைவிட்டு வந்து விட்டேன் தெரியுமா?"

"அதை நான் தெரிந்து கொள்ள வேண்டுமா' என்று கேட்டேன்.

"சரி! நான் சொல்லாமல் இருக்க முடியவில்லை.”

'எனக்குத் தெரியும் பிழைப்பற்றவர்கள்தான் இந்த நகரங் களுக்குக் குடி வருகிறார்கள்' என்றேன்.

'நான் ஒரு பிழைப்புக் கெட்டவள் என்று நினைக்கிறாயா?”

'அப்படி நினைக்கவில்லை. எங்கே இருந்தாலும் உன் ஒருத்திக்குத்தானா சோறு கிடைக்காமல் போய்விடும்.'

'பின் ஏன் ஓடி வந்து விட்டேன் தெரியுமா?” 

'சரி சொல்லித் தொலை'

'எனக்கு வீட்டில் இருக்க முடியவில்லை”

'அப்படின்னா சினிமாவிலே சேரலாம் என்று நினைத்து வந்து விட்டாயா?"

'அதெல்லாம் இல்லை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/29&oldid=1461937" இலிருந்து மீள்விக்கப்பட்டது