பக்கம்:அரை மனிதன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அரை மனிதன்


 நாடு சிவப்பு நிறம் அடையாமலே மாற்றத்தை உண்டாக்க முடியும் என்ற எண்ணத்தை என்னுள் ஒடச் செய்தது. தொழிலாளி சிகப்புக் கொடியைக் காட்டுவதுபோல எனக்குக் காட்சி அளித்தது. தொழிலாளி மற்றவர்கள் தன்னைக் கவனிக்கும் படி காட்டுகின்ற சைகையாக அது இருந்தது. அந்தச் சிகப்பு மற்றொரு பொருளை நினைவுப்படுத்தியது. சிவப்பு விளக்கு ரயிலிலே வண்டியை நிறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிற அந்தச் சிகப்பு விளக்கு அல்ல; ஆடவர்களைக் கவர்ந்து அழைக்கின்ற விளக்கு. "சிவப்பு விளக்கு' எரியுமா என்ன? இரவு படுக்கையறையில் விளக்குச் சிகப்பாகத்தான் எரியும்.

அங்கே இருந்துதான் அவள் தப்பித்து வந்தாள் என்று நினைக்கிறேன். அவளும் care of பிளாட்பாரம் ஆகி விட்டாள். அவள் யார் கூப்பிட்டாலும் வருவாள். அதாவது எந்தச் சின்ன வேலை சொன்னாலும் செய்வாள். பக்கத்திலே இருக்கிற கடைக்காரர்கள் எடுபிடி வேலை சொல்ல அவற்றைச் செய்வாள். அவளை ஏதாவது கிண்டல் செய்வார்கள். அவளுக்கு ஒரு 'டி' வாங்கிக் கொடுத்தால் போதும்! அவள் முகத்தில் கொள்ளை இன்பம் காண முடியும்.

"ஏன்'மே ஓடி வந்து விட்டாய்?" என்று சாதாரணமாகக் கேட்டார்கள். -

'மா'என்பது அவர்களைப் பொறுத்தவரை 'மே' ஆயிற்று.

அவள் ஒரு காலத்தில் மாவாகத்தான் இருந்திருக்கிறாள். பின்னால்தான் மே ஆனாள்.

நான் மட்டும் அவளை 'மா' என்றுதான் கூப்பிட்டேன். அதனால் அவள் என்னிடம் ரொம்ப மரியாதை காட்டினாள்.

சுமைதாங்கி நண்பர் என்னை அபாய அறிவிப்புச் செய்து வைத்தார். இந்தப் பிளாட்பாரத்தில் சிலதுகள் வரும்; நீ ஜாக்கிர தையாக இருக்க வேண்டும். 'சீப்பாகக் கிடைக்கும். சீப்பாகப் போகக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/28&oldid=1461936" இலிருந்து மீள்விக்கப்பட்டது