பக்கம்:அரை மனிதன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அரை மனிதன்


 ரொம்பவும் மேலே போய்விட்டால் மனிதன் மனிதனாகவே தெரியாது. சிற்றெறும்புகள் ஊர்வதைப் போலத் தெரியும். பலபேர் தம் சொந்தக்காரர்களைச் சின்ன வேலையில் அமர்த்த மாட்டார்கள். அது அவருக்கு அவமானமாம். அதாவது தான் ஜமீன்தார் பரம்பரையிலே வந்தவன் என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

அவன் பள்ளிக்கூடம் படிக்கும்பொழுதே அம்மா சில சமயம் சோறு எடுத்துப் போவார்கள். அவனுக்கு வெட்கம். சாப்பாட்டுக்காரி என்று சொல்லியிருக்கிறான். அதற்காக அம்மா கவலைப்பட்டது இல்லை. அவள் உழைத்தாள். அதனால் அவள் சந்தோஷப்பட்டாள். சமுதாயத்தில் அவன் வாழத் தெரிந்தவன் என்பதற்காக அவள் மகிழ்ச்சி அடைந்தாள். அப்பாவுக்கு அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்குத் 'தாய் மனம்' இல்லை. தன் மகனின் கவுரவுத்துக்காகத் தானே அப்படிச் சொல்லிக் கொள்கிறான். சட்டை துணி போல இந்தப் போலிக் கவுரவம் இருக்கிறது என்பதை அவர் எண்ணிப் பார்க்கவில்லை. எதற்காகப் பிரமாதமாக உடுத்துகிறார்கள். அழகுக்காக இல்லை. கவுரவுத்துக்குத்தான். தான் பெரிய ஆபீஸர் என்றால் கோட்டும் சூட்டும் தேவை என்று நினைக்கிறான். கலியாணத்திலே பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகத் தாய்மார்கள் உடுத்திக் கொண்டு வருகிறார்கள். பாவம் ஒழிந்து போகட்டும். ஒரு நாளைக்குத்தானே. மற்ற நாள் எல்லாம் அவர்கள் இந்த நாட்டின் பொது உடையில்தான் காணப்படுகிறார்கள். அதுவும் இந்தச் சீருடை வந்து குழந்தைகளின் மனத்திலேயே உடையின் மேல் இருக்கும் மோகத்தையும் வேகத்தையும் குறைத்து விட்டது.

இந்தக் கொலு பொம்மை நாட்களில் இவர்களும் அந்தப் பொம்மைகளைப் போல அழகாக உடுத்துகிறார்கள். பார்க்க ரம்மியமான காட்சிகள்.

நாம் ஒன்று நினைக்க மற்றவர்கள் வேறுவிதமாக நினைக்கத் தொடங்கி விட்டார்கள். நான் அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/40&oldid=1461948" இலிருந்து மீள்விக்கப்பட்டது