பக்கம்:அரை மனிதன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

39


 பெண்ணோடு சுற்றுகிறேனாம். அவள்தான் என்னைச் சுற்றி வருகிறாள். நடைவாசியை (அதுதான் பிளாட்பாரம் என்பதற்கு அழகான மொழி பெயர்ப்பு) நான் துணைவியாக்கிக் கொண்டேனாம். அவள் எத்தனையோ கைமாறி விட்டாளாம். விடுதி கண்டவளாம். கன்னாபின்னா என்று பேசிக் கொள்கிறார்கள். அதையும் தாங்கிக் கொள்ள வேண்டியதுதான். அவள் எனக்குத் துணையாக இருக்கிறாள் என்பதற்கு நான் ஏன் குபேரனின் மகனா! அல்லது பட்டுக்கோட்டை ஜமீன்தாரின் பெயரனா. சாதாரண அச்சுத் தொழிலாளியின் அச்சுத்தானே. என் குலப் பெருமையைப் பற்றிப் பேசுவதற்கு எனக்கு என்ன இருக்கிறது. எனக்குப் பெருமை இருந்தால்தானே என் குலத்துக்குப் பெருமையைக் கூட்ட முடியும். கால் இழந்த நொண்டி; நாடோடி நிலையில் வாழ்கிறேன்.

சுமைதாங்கி நண்பர் சொன்னதுபோல் ஏன் தொழில் நடத்தக் கூடாது; அப்பாவுக்கு என்னைத் தவிர யார் ஆதரவு இருக்கிறார்கள். அதே சமயத்தில் நொண்டிக்கும் ஒரு கால் கட்டாக அந்த நடைபாதை வந்து சுற்றிக் கொண்டாள். அவளை நான் வீட்டுக்கு அழைத்துப் போக முடியுமா. அவள் பழைய வரலாறு. அதுவும் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. அப்பாவுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வரும். கண்ட கசமாலம் எல்லாம் வீட்டுக்குள்ளே நுழைந்து விட்டது என்று பேசி விடுவார். அவள் 'கசமாலம்தான்'. அதே பேர்தான் நிலைத்திருக்கட்டுமே. அவளை நினைக்கும்பொழுது 'கம்சலை' என்ற கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறாள்.

எங்களுக்கு வேறு என்ன வேலை. கண்ட புத்தகங்களைப் படிப்பதுதானே வேலை. இந்தப் பசங்க சினிமா பார்த்தாலும் பார்க்கிறாங்க. ஒவ்வொரு பாட்டுப் புத்தகத்தையும் வாங்கிக் கொண்டு வந்து விடறானுங்க. அதிலேகூட கவிதை இருக்கு; அவனுங்க நம்புறானுங்க. நான் அச்சாபீஸிலே பார்த்திருக்கிறேன். அவனவன் 'புதுக்கவிதை' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/41&oldid=1461949" இலிருந்து மீள்விக்கப்பட்டது