பக்கம்:அரை மனிதன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அரை மனிதன்


 அச்சடிக்கக் கொண்டு வந்து விடுவாங்க. ஆள் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். கவிஞர்கள் என்றால் பாரதி போலத் தலைப்பாகை கட்டிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைத்தது உண்டு. பாரதிதாசனைப் படத்திலே பார்த்திருக்கிறேன். 'மீசை' நன்றாக இருக்கிறது. அவர்களை எல்லாம்தான் கவிஞர்கள் என்று சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். இந்தச் சினிமாப் புத்தகத்தைப் பார்க்கும்பொழுது இதிலேயும் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை அப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். ஆனால் மேல் மட்டத்திலே இருக்கிறவர்களுக்கு இந்த உண்மை தெரியாது. இங்கே என் 'சிஷ்யர்கள்' எல்லாம் அந்தப் பாட்டைத்தான் பாடுகிறார்கள். என் 'கஷ்மாலம்' சே அப்பா அந்தச் சொல்லிலே சொல்லலாம். அவர் பழகிய உலகம் அது. அவருக்கு இந்த உலகம் எப்படித் தெரியும். தெரிவதற்கு வாய்ப்பு ஏது. இவர்கள் யாருக்கும் முகவரிகூடக் கிடையாது. அதனால் இவர்களை யாரும் சீண்டுவதுகூட கிடையாது. அவள் பெயர் அம்மாகண்ணு. நான் அவளை 'மா' என்று கூப்பிட்டேன். அது அம்மா என்பதன் சுருக்கம். அதைத்தான் மற்றவர்கள் 'மே' என்று சொன்னார்கள். அந்த விடுதியில் அவளைக் "கண்ணு" என்று அவர்கள் அழைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நம் கதைக்கு அவளை 'மே' என்று கூப்பிட்டால் போதும் என்று நினைக்கிறேன். எல்லாரும் அப்படித்தானே அவளைக் கூப்பிட்டு இருப்பார்கள். அந்த 'மே' ஒரு முக்கியமான பாத்திரம் ஆகிவிட்டாள். இந்தச் சூழ்நிலையில் அவளுக்கும் சினிமாப் பாட்டு பாடுவதில் ரொம்பவும் பிரியம். 'மச்சானைப் பார்த்தீங்களா' என்ற பாட்டை ரொம்பவும் திரும்பத் திரும்பப் பாடுவாள். அது அவளுக்குப் பிடித்த பாட்டு; சும்மா இருக்கும்பொழுது அவளைக் கிளறி விட்டால் அந்தப் பாட்டை அழகாகப் பாடுவாள்.

அவர்கள் என்ன சங்கீத வித்வான்களிடமா பாடம் கேட்கிறார்கள். அதுதான் ரிகார்டு, ரேடியோ, சினிமா. இதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/42&oldid=1461950" இலிருந்து மீள்விக்கப்பட்டது