பக்கம்:அரை மனிதன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

41


 சங்கீத வாத்தியார். நீங்கள் குருவிக்காரைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் சில சமயம் எங்களைச் சுற்றிக் கொள்வார்கள். 'பாடு' என்று சொன்னால் போதும். ஆனால் அவர்களுக்குக் காசு தரவேண்டும். கையிலே டப்பா. அது எல்லாத்துக்கும் பயன்படும். அது பாடுவதற்கு இசைக் கருவியாகவும் அமையும். அந்த 'டான்சுகள்' பிரமாதமாக இல்லாவிட்டாலும் மனசுக்கு ரொம்ப பிடித்து இருக்கும். எல்லாம் 'இமிடேசன்' தான். இருந்தாலும் அதுபோதும். சங்கீத வித்வான்கள் பக்க வாத்தியம் இல்லாமல் பாடமாட்டார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. அவர்கள் குரல் தனித்துப் பார்த்தால் தெரியாமல் இந்தத் தொழிலுக்கு வந்தவர்கள் என்பதைக் காட்டிவிடும். இங்கே குரலிலே யார் மேலேயும் குற்றம் கண்டு பிடிக்க முடியாது. எல்லாம் கிழிச்சல்தான். இருந்தாலும் அதிலே கலர் இல்லாமல் இல்லை.

நான் கம்சலைப் பற்றிச் சொல்ல வந்தேன். அங்கே ரிக்க்ஷாக்கள் எப்பொழுதும் நின்று கொண்டு இருக்கும். இப்பொழுதுதான் இழுக்கும் வண்டி மறைந்து விட்டதே. எல்லாம் சைக்கிள் ரிக்க்ஷாதான். அங்கே அவர்கள் ராஜாக்கள்தான். சும்மா கால்மேல் கால் போட்டுக் கொண்டு அந்தச் சீட்டிலே சாயந்து கொண்டு இருப்பதைப் பார்த்தால் இங்கேயும் சுகம் இருக்கத்தான் செய்கிறது என்பதை உணர முடியும்.

அந்த ரவுடி பையன் 'ரங்கன்' அவன்தான் என் தம்பி கார்மேல் கல்லை வீசினான்; அவன்தான் அந்தப் புஸ்தகம் வைத்துக் கொண்டிருந்தான். 'சினிமாவுக்குப் போன சித்தாளு'. அது சினிமாப் பாட்டுப் புத்தகம் படிக்கிறமாதிரி இருந்தது. பேரு அப்படி இருந்தது. அதை அங்கிருந்தவர்கள் எல்லாம் ரசித்துப் படித்தார்கள். ஆனால், அதே சமயத்திலே வாத்தியார் தாக்கப்பட்டது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

வாத்தியார் தாக்கப்பட்டிருக்கக் கூடாது. அவர் படத்திலே இருக்கிற மகத்துவம் பலபேருக்குத் தெரியாது. 'நல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/43&oldid=1461951" இலிருந்து மீள்விக்கப்பட்டது