பக்கம்:அரை மனிதன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

53


பத்திரிகைகளும் போட ஆரம்பித்து விட்டாங்க. ஒரு பத்திரிகை எஞ்சி இருக்கிற குடும்பத்தைப் பேட்டி கண்டு அந்த மூன்று பேரு போட்டோவையும் போட்டு வைத்து விட்டது. அந்த அம்மா மகாலட்சுமி மாதிரியா லட்சணமா இருக்காங்க எப்படித்தான் அவங்களைக் கொல்ல அவனுக்கு மனம் வந்ததோ தெரியவில்லை. அந்த மனுஷன் அப்படியே பேயறைந்தால் மாதிரி ஆகி விட்டார். அந்தப் புள்ளை பாவம் அநாதையாகப் போய்விட்டது. பட்டணம் வந்த கொடுமை; அந்தக் குடும்பம் இந்தக் கதிக்கு வந்துவிட்டது. அதுதான் பட்டினப் பிரவேசம்' என்ற படத்திலே காட்டுகிறார்களே. கிராமத்திலே இருந்து வந்த குடும்பம் எப்படிச் சீரழிந்து போய்விட்டது என்று காட்டியிருக்கின்றார்கள். இதைப் பட்டணத்து ஜனங்கள்தான் போய்ப் பார்க்குதங்க. இது இந்த நகரத்துக்கே அவமானம். என்ன செய்யறது. உள்ளதைத்தானே காட்டியிருக்கிறாங்க. எப்படிச் சொல்ல முடியும். அதுதான் உள்ளது என்று. எவ்வளவோ நல்லது இருக்கிற இடத்திலே இந்த மாதிரி சில கெட்டதுகளும் ஏற்படத்தான் செய்யுது. இந்த மாதிரி பத்திரிகைச் செய்தி வந்ததும் மருமகளுக்குத் தூக்கமே இல்லை. நகை நட்டு எல்லாம் பத்திரமா அம்மா வீட்டுக்குக் கொடுத்து அனுப்பி விட்டாளாம். இப்ப பலபேரு அதிகமாக நகை போடறது இல்லை. இந்தப் பத்திரிகைச் செய்தி வந்ததும் அது அது அதிகமாக நகை போட்டுக் கொண்டு வெளியே வருகிறது குறைந்து போய்விட்டது. கலி யாண்த்திலே கூட அதிகமாகப் போட்டுக் கொள்வது இல்லை. எல்லாம் லாக்கர்லே வைத்துப் பூட்டி வைத்து விடுகிறார்கள். இப்ப கேட்டால் எல்லாம் அப்படித்தான் சொல்கிறார்கள். நகை இல்லாவிட்டால்கூட இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்வது நாகரிகமாகப் போய்விட்டது. இந்தக் காலத்திலே நகைகளைப் போட்டுக் கொண்டு வெளியே வருவது அவ்வளவு நல்லதாகப்படவில்லை. அது மற்றவர்களை உறுத்துது. எவனாவது மோப்பம் பிடித்துப் பின்னாலேயே வந்து இப்படி எல்லாம் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/55&oldid=1156773" இலிருந்து மீள்விக்கப்பட்டது