பக்கம்:அரை மனிதன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அரை மனிதன்


நகைகள் பெண்மையை மறைப்பதற்கு உதவுவதைப் பார்த்து இருக்கிறேன். அவ்வளவு எளிதாக அவனால் பொது இடங்களில் அடித்து இருக்க முடியாது. அவள் என்ன பஸ்ஸிலேயே போகிறாள். போக வேண்டிய அவசியம் அவளுக்கு ஏற்பட்டது இல்லை.

"நான் என்ன கூலிக்காரன் பெண் என்று நினைத்தாயா பஸ்ஸில் ஏறுவதற்கு என்று சொல்லி இருக்கிறாள். எங்கப்பா ஒன்றும் அந்த நிலையில் வைக்கவில்லை" என்று அவள் பேசி இருக்கிறாள்.

பிரபலஸ்தர்கள் பஸ்ஸில் ஏற முடிவதில்லை; என் தம்பியின் மனைவியைப் போல பணத்திமிர் பிடித்தவர்கள் பஸ்ஸில் ஏறுவதை அவமானம் என்று நினைக்கிறவர்களும் இருக்கின்றார்கள். அப்படி இருக்க அவன் எப்படி அவள் கழுத்தில் கை வைத்திருக்க முடியும்.

அது மட்டும் இல்லை. அது எங்கள் வீட்டு நெக்லஸ் என்பதால் அதை அவள் கழுத்தில் போட்டுக் கொள்வ தில்லை. அது அவள் நெஞ்சை சுடுகிறது என்று நினைக்கிறேன். அதனால் ஒருவேளை மறுபடியும் உறவு வளைத்துக் கொள்ளுமோ என்று அஞ்சுகிறாள் என்று நினைக்கிறேன்.

அதை அவள் தொடுவதே இல்லை. அவன்தான் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். அதுவும் அவன் சாதாரணமாக லாக்கரில் தான் வைத்திருப்பான். நிச்சயமாக ரங்கன் அதைத் தொட்டு இருக்க முடியாது. என் தம்பிதான் அதை அவளுக்குக் கொடுத்திருக்க வேண்டும். அவனுக்கு எவ்வளவு துணிச்சல், இதயமற்ற தன்மை. அது என் கால் உடைந்து அது தேடித் தந்த செல்வம். என் தியாகத்தின் ஒளி, அதை அவன் எப்படித் தவறாகப் பயன்படுத்தினான். ஏழைகளின் உழைப்பால்தான் நாட்டின் செல்வமே உருவாகிறது. இந்த ஊதாரிகள் அதை எப்படி எப்படியோ பறித்துக் கொள்கிறார்கள். அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/82&oldid=1461979" இலிருந்து மீள்விக்கப்பட்டது