பக்கம்:அரை மனிதன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

83என் தம்பி அழிகிறானே என்பதில்தான் அவளும் அக்கரை காட்டினாள். அதைக் காட்டுவதற்குத்தான் அவள் அந்த நெக்லசைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதைச் சேர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். அதை நாங்கள் எப்படிக் காப்பாற்ற முடியும். அதை எப்படி ஒளித்து வைப்பது. அது லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்குத்தான் தெரியும். எங்களுக்கு அந்தப் பழக்கம் கிடையாது. அதற்காகவே அந்த இடத்தை விட்டு நீங்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. இனிமேல் காலத்துக்கும் எப்படி உதிரிகளாக வாழ முடியும்.

அந்த நெக்லஸ் நான் அம்மாவுக்காக வாங்கச் சொன்னது. அவர்கள் எப்படி எப்படியோ அச்சாபீசில் சேர்த்து வைத்தது. எனக்கும் தெரியாமல் அவ்வப்பொழுது சேர்த்து வைத்த காசு அது. அப்பொழுது நாங்கள் கொஞ்சம் நன்றாக இருந்தோம். அச்சுத் தொழில் நன்றாக நடந்தது.

அப்பொழுதுகூட தம்பி குடும்பத் தொழிலில் கவனம் செலுத்த மாட்டான். அவன் கற்பனைகள் எல்லாம் மேலே பறந்தன. எப்படியாவது படிக்க வேண்டும்; முன்னுக்கு வர வேண்டும் என்று நினைத்தான். அவன் அதிருஷ்டம் நல்ல நிறமும் பெற்றிருந்தான். அவன் இந்தக் குடும்பத்தில் பிறக்கத் தகுந்தவன் அல்ல என்று நினைத்தார்கள். உழைப்பாளிகள் குடும்பத்தில் அழகாக யாரும் இருக்க மாட்டார்கள் என்று தவறாக நினைத்தார்கள். அவன் பெரிய இடத்தில் பிறந்திருக்க வேண்டியவன் என்று நினைத்தார்கள். அல்லது பெரிய இடத்து மருமகனாக ஆக வேண்டும் என்று நினைத்து வந்தார்கள்.

அவனுக்கு ஆரம்பத்தில் எல்லாம் வியப்பாக இருந்தது. நான் எப்படி மத்தியதரக் குடும்ப அளவுகளைக் கொண்டு உதிரிகளை மதிப்பிட்டேனோ அதேபோல் அவன் மேல் நிலையைக் கொண்டு எங்களை அளக்கத் தொடங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/85&oldid=1461982" இலிருந்து மீள்விக்கப்பட்டது